ஜனாதிபதிகள் படுகொலை குறித்த சூழ்ச்சி தொடர்பிலான ஆவணங்கள் பல தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை தொகுத்து அளிப்பதற்கு குறைந்தது 10 இலட்சம் ரூபா வரை செலவாகும் எனவும் பொலிஸ் உளவாளியான நாமல் குமார தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கையில் தற்போது ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கான எந்த திட்டமும் இருப்பதாக புலனாய்வில் கிடைக்கவில்லை.
ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டில் இடம்பெற்ற தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அப்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன ஆகியோரை படுகொலை செய்வதற்கான சூழ்ச்சிகள் குறித்து விசாரணைகள் முறையாக இடம்பெற வேண்டும் என்றார்.