பொதுவாகவே தென்னிந்திய உணவுகளில் சட்னி வகைகளுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது.
குறிப்பாக சட்னி என்றால் பெரும்பாலானவர்களக்கு முதலில் நினைவுக்கு வருவது தேங்காய் சட்னி தான்.
தேங்காய் சட்னி இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் பிரசித்தி பெற்ற ஒரு உணவு பொருளாகவே இருக்கின்றது.
அதனை ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு விதமாக தயாரிக்கின்றார்கள். அந்த வகையில் கேரளா பாணியில் அனைவரும் விரும்பும் வகையில் அசத்தல் சுவையில் தேங்காய் சட்னி செய்யும் முறை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
தேங்காய் எண்ணெய் - 2 தே.கரண்டி
சின்ன வெங்காயம் - அரை கப்
பூண்டு - 5 பல்
வர மிளகாய் - 5
துருவிய தேங்காய் - 1 கப்
இஞ்சி - 1 துண்டு
தாளிக்க தேவையானவை
தேங்காய் எண்ணெய் - 1 தே.கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தே.கரண்டி
நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
வரமிளகாய் - 2
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து நன்றாக வதக்கிக் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் வரமிளகாயையும் சேர்த்து சில நொடிகள் நன்றாக வதக்கி தனியாக எடுத்து நன்றாக ஆறவிட வேண்டும்.
அதனையடுத்து தேங்காய், இஞ்சி, உப்பு மற்றும் வறுத்த வெங்காயம், பூண்டு மற்றும் மிளகாய் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றான அரைத்து ஒரு கிண்ணத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு போட்டு வெடிக்க விட்டு, உளுந்தம்பருப்பைச் சேர்த்து சில நொடிகள் பொன்னிறமாக வதக்கி, பின்னர் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
இறுதியாக கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி, இந்த கலவையை சட்னி மீது ஊற்றினால் அவ்வளவு தான் கேரளா பாணியில் தேங்காய் சட்னி தயார்.