பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசனில் கலந்துகொண்ட கேபிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் ரூபாய் ஐந்து லட்சத்தை பெற்றுக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்புசமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் சமீபத்தில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.
இந்நிலையில் தனக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தான் அனைத்து சிகிச்சை முறைகளையும் மேற்கொண்டு தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் குணமடைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், தயவு செய்து அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ’இதுவும் கடந்து போகும்’ என்றும் அவர் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேபிக்கு பிக்பாஸ் சக போட்டியாளர்களான அர்ச்சனா, பாலாஜி, ரம்யா பாண்டியன், ஆஜித் உள்பட பலரும் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற போட்டியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.