புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்லாடாக்சின் என்ற இரசாயன பதார்த்தம் கலந்துள்ளதாக உறுதியான இறக்குமதி செய்யப்பட்ட 6 தேங்காய் எண்ணை கொள்கலன்கள் சுங்க அதிகாரிகளினால் இன்று (06) கொழும்பு துறைமுகத்திற்கு மீள் ஏற்றுமதிக்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

´கட்டான ரிபைனரிஸ்´ நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 6 கொள்கலன்களே இவ்வாறு எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அலி பிரதர்ஸ் நிறுவனத்தால் 4 கொள்கலன்களில் 1513.7 மெட்ரிக் டொன் தேங்காய் எண்ணை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை எதிரிசிங்க எடிபல் ஒயில் நிறுவனத்தால் மேலும் 3 கொள்கலன்களில் 230 மெட்ரிக் டொன் தேங்காய் எண்ணை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிறுவனங்களின் கொள்கலன்களும் எதிர்காலத்தில் மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.