நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
குரு பகவான் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் குரு வக்ர நிலையை அடைவார்.
இந்த வக்ர நிலை சில ராசிகளுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அது எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
- உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் வக்ர நிலை அடைந்துள்ளார்.
- வாழ்க்கையில் பல அற்புதமான மாற்றங்கள் உருவாகும்.
- எடுத்த வேலைகள் அனைத்தும் வெற்றியில் முடியும். மகிழ்ச்சியின் உச்சிக்கு செல்வீர்கள் என்றே கூறலாம்.
- வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- பணத்தின் கஷ்டம் வரவே வராது.
சிம்மம்
- உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் வக்கர நிலையை அடைந்துள்ளார்.
- பிப்ரவரி மாதத்தில் இரந்து பல புதிய பொறுப்புக்கள் வரும்.
- வணிகம் செய்தால் அதில் கணிசமான லாபம் கிடைக்கும்.
- வேலையில் பதவி சம்பள உயர்வு கிடைக்கும்.
- கடினமாக வேலை செய்தால் அதனால் பல மடங்கு பலன் கிடைக்கும்.
கடகம்
- உங்கள் ராசியில் 11 ஆவது வீட்டில் குருபகவான் வக்ர நிலையடைந்துள்ளார்.
- இதுவரை கிடைத்த வருமானத்தை விட அதிகமாக வருமானம் கிடைக்கும்.
- பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள்.
- நீண்ட நாட்களாக இரந்த ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.
- புதிய முதலீடுகள் அதிகமான லாபத்தை பெற்று தரும்.
- காதல் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.