பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் தொடர்புப்படுகின்றன. எண்களால் வாழ வைக்கவும் முடியும். அது போல் வீழ்த்தவும் முடியும்.
எண் கணித சாஸ்திரம் எனப்படுவது ஒருவர் பெயருக்கும், பிறந்த திகதி, மாதம், வருடம், பெயர் அனைத்தின் கூட்டுத்தொகையாக வரும் எண்ணுக்கும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் இடையில் உள்ள தொடர்பை கணித்து கூறுவதாகும்.
எண்களால் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என எண்கணித சாஸ்திரம் உறுதியாக கூறுகின்றது.
எண்கணித சாஸ்திரம் தொன்று தொற்று புலக்கத்தில் இருக்கும் நம்பகமான சாஸ்திர முறையாகும்.
அதன் பிரகாரம் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே நிதி முகாமைத்துவத்தில் சிறந்தவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு பிறப்பிலேயே பணத்தை நிர்வதிக்கும் திறமை காணப்படுகின்றது.
அப்படி எந்தெந்த திகதிகளில் பிறந்தவர்கள் பணத்தை கையாளுவதில் அதீத திறமைசாலிகளாக இருப்பார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
4 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள்
12 மாதங்களில் எந்த மாதத்திலும் 4 ஆம் திகதியில் பிறந்தவர்கள் நிதி ரீதியில் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு பொதுவிடயங்களில் அதிகமான அறிவாற்றல் இருக்கும். அவர்கள் ஒழுக்கமானவர்களாகவும் கடின உழைப்பாளிகளிகளாகவும் பண விடயத்தில் சிறந்த மற்றும் தெளிந்த அறிவை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் எந்த விடயத்தையும் சிறந்த முறையில் திட்டமிட்டு செய்யகூடிய அறிவை கொண்டவர்களாக இருப்பார்கள். முதலீடுகள் குறித்து தெளிந்த அறிவு இவர்களுக்கு நிச்சயம் இருக்கும்.
22 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள்
எந்த மாதமாக இருந்தாலும் 22 ஆம் திகதியில் பிறந்தவர்கள் பெரிய பணவிடயத்தில் சிறப்பான அறிவுடையவர்களாக இருப்பார்கள். பணத்தை சரியான முறையில் நிர்வகிக்கும் திறன் இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.
நிதியை கையாள்வதில் அதீத திறமைசாலியான இவர்கள் திட்டமிட்டு சரியான முதலீடுகளை செய்து எவ்வாறு விரைவில் செல்வத்தை சேர்க்கலாம் என்பது பற்றிய ஆழ்ந்த அறிவை பெற்றிருக்கின்றார்கள்.
இவர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை செலவு செய்யாது அதனை இரட்டிப்பாக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருபார்கள்.
13ஆம் திகதியில் பிறந்தவர்கள்
12 மாதங்களில் எந்த மாதத்திலும் 13 ஆம் திகதியில் பிறந்தவர்கள் புத்திசாலித்தனமான நிதி முகாமைத்துவ அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த திகதியில் பிறந்தவர்கள் பார்வைக்கு செலவாளிகள் போல் ஆடம்பரமாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் சிறியளவு பணத்தையும் சரியாக முதலீடு செய்து அதன் வருமானத்தில் தான் ஆடம்பரமாக இருப்பார்பகள்.
இவர்களின் அதீத நிதி பகுப்பாய்வு திறன் காரணமாக, இவர்களால் தங்கள் வாழ்வில் நிறைய பணத்தை விரைவில் சம்பாதிக்க முடியும்.
இவர்கள் பணம் தொடர்பான பழக்கவழக்கங்கள் வாழ்நாள் முழுதும் இவர்களை பணத்திற்பு பஞ்சமில்லாமல் வாழ வழிசெய்கின்றது.