ராசிப்பலன் என்பது ஒருவரின் வாழ்க்கை பற்றி கணிக்கிறது. எதிர்காலத்தில் அந்த நபர் எப்படி வாழ போகிறார் என்பதை கூறுகிறது. பொதுவாக நாம் ஒரு சுப காரியத்தை செய்ய விருக்கிறோம் என்றால் ராசிப்பலன் பார்ப்பது வழக்கம்.
தற்போது 2024 ம் ஆண்டு முடிவடைந்து 2025ம் ஆண்டு ஆரம்பமாக உள்ளது. இதில் பல கிரகப்பெயர்ச்சிகளும் நடைபெற உள்ளது. இதில் சில கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாகும்.
அந்த வகையில் 2025 இல் குருப்பெயர்ச்சியால் சில ராசிகள் நன்மை பெறப்போகின்றன. குருபகவான் குடும்பம் மகிழ்ச்சி, செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார் .
இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இந்த நிலையில் குருபகவானால் 2025 இல் எந்த ராசிக்காரர்கள் நன்மை பெறப்போகின்றனர் என்பதை பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
- குருபகவானின் இந்த பயணம் உங்களுக்கு ஒரு அதிஷ்ட வாழ்க்கையை கொடுக்கப்போகிறது.
- நீங்கள் எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதில் வெற்றி பெறுவது நிச்சயம்.
- இதுவரையில் மற்றவர்களிடம் கிடைக்காத பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும்.
- வியாபாரம் வேலை இதில் நல்ல லாபம் கிடைக்கும்.
- நிதி நிலையில் முன்னேறி வாழ ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். பொருளாதாரம் வலுவாக இருக்கும்.
ரிஷபம்
- உங்கள் ராசிக்கு வேலையில், தொழிலில், நீண்ட கால திட்டமிடலுக்கு சாதகமான நேரம் அமையும்.
- எதிர்காலத்தில் எடுக்கும் முடிவுகளை யோசித்து எடுத்தால் வெற்றி நிச்சயம்.
- தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும் நேரம் இது.
- துணிந்து செய்ற்ப்பட வாய்ப்பு அதிகம்.
மிதுனம்
- குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும்.
- புதிய வேலைகளில் நீங்கள் சேர்ந்திருந்தால் அதில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
- குடும்பத்தில் சில சில பிரச்சனைகள் வரலாம் இவை அனைத்தையும் மாற்ற நிதானமான யோசனை முக்கியம்.
- முடிந்தவரை எதையும் யோசித்து முடிவெடுப்பது அவசியம்.