பொதுவாகவே ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் ஆகியன அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை பண்புகளில் ஆதிக்கம் செலுத்தும்.

அதே போன்று எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக தொன்று தொட்டு நம்பப்படுகின்றது. 

இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் கணவனுக்கும் தந்தைக்கு பேரதிர்ஷ்டம் கொடுப்பார்களாம்... உங்க திகதி என்ன? | Which Date Born Girls Are Lucky For Their Husband

பிறந்த திகதியை அடிப்படையாகக்கொண்டு ஒருவருடைய எதிர்கால வாழ்க்கையை துல்லியமாக கணித்து கூறும் ஒரு பழங்கால முறைமையாக எண்கணித ஜோதிடம் திகழ்ந்து வருகின்றது.

அதன் பிரகாரம் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்த பெண்களால் அவர்களின் தந்தை மற்றும் கணவர் நிதி ரீதியில் பாரிய வளர்ச்சியை காணப்பார்கள் என்று குறிப்பிடப்படுகின்றது. 

அப்படி பிறந்த உடன் தந்தைக்கும் திருமணத்தின் பின்னர் கணவனுக்கும் பேரதிர்ஷ்டத்தையும் ராஜயோகத்தையும் கொடுக்கும் பெண்கள் எந்த திகதிகளில் பிறந்தவர்கள் என்பதை இந்த பதிவில் பார்க்லாம்.

3 ஆம் திகதிகளில் பிறந்த பெண்கள்

இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் கணவனுக்கும் தந்தைக்கு பேரதிர்ஷ்டம் கொடுப்பார்களாம்... உங்க திகதி என்ன? | Which Date Born Girls Are Lucky For Their Husband

12 மாதங்களில் எந்த மாதத்திலும் 3 ஆம் திகதிகளில் பிறந்த பெண்கள் செல்வ செழிப்பின் அதிபதியான குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் அவர்கள் குடுப்பத்துக்கு அதிர்ஷ்ட தேவதையாகவே இருப்பார்கள். 

இந்த திகதிகளில் பிறந்த பெண் குழந்தைகள் பிறந்த உடனேயே, தனது தந்தைக்கு நிறைய செல்வத்தை கொடுப்பார்கள். இவர்கள் பிறந்த பி்ன்னர் குடும்பதில் இருந்த கடினமான சூழ்நிலைகள் மாறி சுபீட்சம் ஏற்படும். 

அவர்கள் திருமணத்தின் பின்னர் புகுந்த வீட்டுக்கும் செல்ல செழிப்பை கொடுக்கும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

12ஆம் திகதிகளில் பிறந்த பெண்கள்

இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் கணவனுக்கும் தந்தைக்கு பேரதிர்ஷ்டம் கொடுப்பார்களாம்... உங்க திகதி என்ன? | Which Date Born Girls Are Lucky For Their Husbandஒரு மாதத்தின் 12 ஆம் திகதியில் பிறந்த பெண்கள் தங்களின் தந்தையை பெருமைப்படுத்துவதுடன் நிதி ரீதியிலும் அதிர்ஷ்டத்தை கொடுப்பவர்களாக இருப்பார்கள். 

இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே பணம் உட்பட அனைத்து செல்வங்கங்களையும் ஈர்க்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். 

திருமணத்தின் பின்னர் கணவனுக்கும் இவர்களின் அதிர்ஷ்டதால் நிதி மற்றும் தொழில் ரீதியில் சிறந்த முன்னேற்றம் கிடைக்கும். 

 21ஆம் திகதிகளில் பிறந்த பெண்கள்

இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் கணவனுக்கும் தந்தைக்கு பேரதிர்ஷ்டம் கொடுப்பார்களாம்... உங்க திகதி என்ன? | Which Date Born Girls Are Lucky For Their Husbandஇந்த திகதிகளில் பிறந்த பெண்கள் அவர்கள் குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்கு உயர்த்தும் ராஜ யோகம் கொண்டவர்களாகவே பிறப்பெடுக்கின்றார்கள்.

இவர்களின் பிறப்பு தந்தைக்கு எதிர்பாராத அளவுக்கு செல்வ செழிப்பை கொடுக்கும். அவர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.

அது போல் இவர்கள் புகுந்த வீட்டுக்கு செல்லும் காலம் வரும் போது கணவனுக்கு அதிர்ஷ்ட தேவதைகளாக இருப்பார்கள். 

30 ஆம் திகதிகளில் பிறந்த பெண்கள்

இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் கணவனுக்கும் தந்தைக்கு பேரதிர்ஷ்டம் கொடுப்பார்களாம்... உங்க திகதி என்ன? | Which Date Born Girls Are Lucky For Their Husband

எந்த மாதமாக இருந்தாலும்  30 ஆம் திகதிகளில்  பிறந்த பெண்கள் செவ்வாய் மற்றும் குருவின் முழுமையான ஆசீர்வாதத்தை பெற்றவர்களாக இருப்பார்கள். 

இவர்களின் பிறப்பின் பின்னர் அவர்களது தந்தையின் வாழ்க்கை நிச்சயம் பாரிய முன்னேற்ற பாதையில் செல்லும். 

இவர்கள் திருமணத்தின் பின்னர் புகுந்த வீட்டுக்கும் கணவனுக்கும்  பேரதிர்ஷ்டத்தை கொடுக்கும் தேவைதைகளாக இருப்பார்கள்.