தலையில் ஏற்படும் பொடுகு பிரச்சனையை சரிசெய்யும் சில பொருட்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொடுகு என்பது பெரும்பாலான நபர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனையாகும். குளிர்காலங்களில் முடி வறண்டு இருக்கும் பொழுது பொடுகு தொல்லை ஏற்படுகின்றது.

இதனை நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

காபி உங்களது முடியை பாதுகாக்க உதவுகின்றது. அதாவது காபியை நன்கு ஆற வைத்து முடியில் தேய்த்து வந்தால் பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம்.

இதே போன்று உச்சந்தலையில் அரிப்பு மற்றும் பொடுகு போன்று செதில்களாக இருக்கும் பிரச்சனையை சரிசெய்ய வேப்பிலைகள் உதவுகின்றது. வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து முடிக்கு தடவவும். பின்பு ஷாம்பு போட்டு கழுவினால், பொடுகு நீங்கும். 

ஆப்பிள் சீடர் வினிகர் அதிக ஈஸ்ட் வராமல் தடுக்கின்றது. இதனை தண்ணீருடன் கலந்து உச்சந்தலையில் வைத்து 15 நிமிடங்கள் ஊற வைத்து தலையை அலசவும்.

கற்றாழை முடி மற்றும் சருமத்திற்கு பல நன்மைகள் அளிக்கின்றது. கற்றாலை ஜெல்லை தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்து ஷாம்பு போட்டு கழுவினால் பொடுகு தொல்லை நீங்கும்.

பொடுகு தொல்லைக்கு Goodbye சொல்லனுமா? இந்த பொருட்களை மட்டும் பயன்படுத்துங்க | Dandruff These Home Remedies Will Help Removeபொடுகுத் தொல்லையை சரிசெய்வதற்கு பூண்டு சிறந்த உதவி செய்கின்றது. பூண்டை தட்டி, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து, தலைக்கு தேய்க்கலாம். பின்பு 30 நிமிடம் ஊற வைத்து தலையை அலசினால் பொடுகு தொல்லை இருக்காது.

எலுமிச்சை சாறை தலையில் நன்கு தேய்த்து, அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு மென்மையான ஷாம்பு போட்டு கழுவவும்.