ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவரின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியை சேர்ந்தவர்கள் தங்களை காதலிக்கும் நபர்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ள மாட்டார்களாம்.
இவர்கள் எப்போதும் தங்களின் ஆசைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுப்பார்கள்.
இதனால் இவர்களுடன் வாழ்பவர்கள் பெரும் துன்பத்தை அனுபவிக்க நேரிடும். இப்படி காதலிப்பவர்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தும் ராசியினர் யார் யார் என இந்த பதவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியினர் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் அதிகமாக உணர்ச்சிவசப்பட மாட்டார்கள். இவர்களை காதலிக்கும் நபர் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருந்தால் இவர்கள் மிகவும் துன்பத்தை அனுபவிக்க நேரிடும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்கள் எப்பொதும் தங்கள் நிலையில் இருந்து சிந்திக்கும் தன்மை கொண்டவர்கள். இவர்களை காதலிப்பவர்களின் உணர்வுகளை பொரும்பாலும் அலட்சியப்படுத்திவிடுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு பொறாமை மற்றும் போட்டி குணம் அதிகமாக இருக்கும். இவர்கள் தங்களை காதலிப்பவர்களுடனும் அதிக போட்டி தன்மையுடன் இருப்பதால் இவர்களுடன் உறவில் இருப்பர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாத நிலை உருவாகும்.