பொதுவாக நம்மில் பலருக்கு ஒற்றை தலைவலி பிரச்சினை இருக்கும்.

இந்த நோய் பல காரணங்களால் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

உதாரணமாக, தூக்கமின்மை, சாப்பிடாமல் இருப்பது, மன அழுத்தம், சத்தம், வெப்பம், தண்ணீர் பற்றாக்குறை ஆகிய காரணங்களை கூறலாம். சொல்வதை விட ஒற்றை தலைவலியால் அவஸ்தைப்படுபவர்களின் நிலை மிகவும் மோசமானதாக இருக்கும்.

இந்த நோய் இருப்பவர்கள் அவர்களின் உடல்நிலையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சில உணவுகள் அவர்கள் சாப்பிடுவது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

அப்படியாயின் ஒற்றை தலைவலி பிரச்சினையுள்ளவர்கள் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன என்பது குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

ஒற்றை தலைவலி பிரச்சினையுள்ளவர்கள் சாப்பிடக் கூடாத உணவுகள்

1. ஒற்றை தலைவலி பிரச்சினையுள்ளவர்கள் ஊறுகாய் வகைகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனின் ஊறுகாயில் அதிக அளவு டைராமைன் மற்றும் உப்பு உள்ளது. இவை ஒற்றைத் தலைவலிக்கு மேலதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

2. சிலர் காரமான உணவுகளை அதிகம் விரும்புவார்கள். இப்படியானவர்கள் சிவப்பு மிளகாய் மற்றும் மசாலாப் பொருட்கள் தவிர்க்க வேண்டும். இவை ஒற்றை தலைவலியை அதிகப்படுத்த வாய்ப்பு உள்ளது.

ஒற்றைத் தலைவலி இருப்பவர்கள் இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடாதீங்க | What Should Not Eat In A Migraine3. நம்மில் பலருக்கு காலையில் காஃபின் கலந்த பானங்களான தேநீர், காபி குடிக்காமல் அன்றைய நாளே ஆரம்பிக்காது. இந்த பழக்கத்தை ஒற்றை தலைவலி பிரச்சினையுள்ளவர்கள் மாற்றிக் கொள்வது நல்லது.

4. சாக்லேட் மற்றும் சாக்லேட் கலந்த உணவுகளில் காஃபின் மற்றும் பீட்டா-ஃபீனைலெதிலமைன் உள்ளது. இது ஒற்றை தலைவலியை அதிகப்படுத்தும்.

ஒற்றைத் தலைவலி இருப்பவர்கள் இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடாதீங்க | What Should Not Eat In A Migraine5. தற்போது கடைகளில் விற்பனையாகும் பல வகையான உணவுகளில் செயற்கை இனிப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒற்றை தலைவலிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே கடைகளில் வாங்கும் உணவுகளை சாப்பிடாமல் இருப்பது சிறந்தது.