ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரங்களின் பிரகாரம் நாம் தூங்கும் போது அதிக ஆற்றல் தொழிற்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில் நமது எண்ணங்கள் நேர்மறையாக தொழிற்படும் பட்சத்தில் நாம் தூக்கத்தில் இருந்தாலும் ஆழ்மனதில் இருக்கும் ஆசைகள் பிரபஞ்சத்துடன் இணைக்கப்படுகின்றது.
இவ்வாறு பிரபஞ்ச சக்தியியுன் தொடர்பை ஏற்படுத்திவிட்டால் போதும் நமது ஆசைகள், நோக்கங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற ஆரம்பித்துவிடும்.
சாஸ்திரங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு இயற்கையாகவே நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி காணப்படுகின்றது. இவை நமது ஆழ்மன எண்ணங்களை பிரபஞ்ச சக்தியுடன் இணைக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
தூங்கும் போது தலையணைக்கு அடியில் எந்த பொருட்களை வைப்பது கெட்ட கனவுகள் வருவதை தடுப்பதுடன் நமது ஆழ்மன ஆசைகளை நிறைவேற்றும் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தூங்கும் போது தலையணைக்கு அடியில் இரும்புப் பொருட்களை வைத்து தூங்குவதால் கெட்ட எண்ணங்கள் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் உங்களுக்குள் வருவதை தடுப்பதுடன் ஆழ்மன ஆசைகளை பிரபஞ்ச சக்தியுடன் இணைக்கவும் உதவுகின்றது.
பெருஞ்சீரக விதைகளை வெள்ளைத் துணியால் கட்டி தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்தால், ராகு தோஷம் நீங்குவதுடன், நேர்மறை ஆற்றலை ஈர்க்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
இப்படி செய்வதால் மனஅழுத்தம் குறைவதுடன் இரவில் கெட்ட கனவுகள் இன்றி நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
தூங்கும் போது தலையணைக்கு அடியில் ஒரு பல் பூண்டு வைத்துக்கொள்வது உங்களை சுற்றி இருக்கு தீய ஆற்றல்களை விரட்டி, நேர்மறை ஆற்றல்களை உருவாக்குகின்றது.
உங்கள் படுக்கைக்கு அருகில் தங்கம் அல்லது வெள்ளி நகைகளுடன் தூங்குவது நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பதற்கு உதவுவதுடன் வாழ்வில் அதிக செல்வ செழிப்பையும் ஈர்ப்பதற்கு உதவுகின்றது.
பரீட்சையில் வெற்றியடைய வேண்டும் என்றால், தூங்கும் போது புத்தகத்தை தலையணைக்கு அடியில் வைத்து தூங்குவது உதவும்.
பாசிப் பருப்புக்கு சாஸ்திரங்களில் முக்கிய இடம் காணப்படுகின்றது. செவ்வாய்கிழமை இரவு பச்சைத் துணியில் பாசிப் பருப்பை கட்டி தலையணைக்கு அடியில் வைத்து தூங்குவது நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதுடன் புதன் தோஷத்தை நீக்கி வாழ்வில் சிறந்த முன்னேற்றத்தை கொடுக்கும்.