பொதுவாகவே பழங்கள் மற்றும் காய்கறிகளில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய அனைத்து ஊட்டச்சத்துக்களும் செறிந்து காணப்படுகின்றது.
அந்தவகையில் கால்சியம் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படும் அத்திப்பழம் எலும்புகளை வலுப்படுத்தவும்,எலும்புகளின் வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
அதே போல அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய சார்ந்த நோய்கள் வரும் அபாயத்தையும் குறைக்கிறது.
அத்திப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் புற்றுநோய் கலன்களின் வளர்ச்சியைத் தடுப்பதிலும் பொரும் பங்கு வகிக்கின்றது.