பொதுவாக தற்போது காதலிப்பவர்கள் ஏமாற்றுவதும், ஏமாற்றப்படுவதும் இன்றைய காலக்கட்டத்தின் சகஜமான ஒன்றாக மாறிவிட்டது.

சிலர் துரதிர்ஷ்டவசமாக திருமணத்திற்குப் பிறகும் ஏமாற்றப்படுவார்கள். காதல் என்பது நேர்மையாகவும் நம்பிக்கையாகவும் இருக்க வேண்டும் என பலரும் நினைப்பார்கள்.

ஆனால் இந்த குணம் தற்போது பலருக்கும் இருப்பதில்லை. நம்பிக்கை விடயத்தில் ஜோதிடம் முக்கிய பங்காற்றுகின்றது என சொல்லப்படுகின்றது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் நேர்மையாக இருப்பார்களாம். இவர்கள் துணையை எக்காலமும் ஏமாற்ற மாட்டார்களாம்.

அந்த வகையில், எந்தெந்த ராசியில் பிறந்தவர்கள் பெண்கள் காதலில் அசைக்க முடியாத நேர்மையுடன் இருப்பார்கள் என பதிவில் பார்க்கலாம். 

இந்த ராசியில் பிறந்தவர்கள் காதலர்களை ஏமாற்றாமல் நேர்மையாக இருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? | These Zodiac Signs Women Never Cheating

ரிஷபம்
  • ரிஷப ராசியில் பிறந்தவர்கள் பெண்கள் பிடிவாதக் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • இந்த ராசியில் பிறந்த பெண்கள் அவர்கள் விரும்பும் நபரிடம் எந்த நேரமும் நேர்மையுடன் நடந்து கொள்வார்கள்.
  • உறவுகள் மற்றும் நட்பில் மிகவும் விசுவாசம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • ஒருமுறை காதல் உறவில் நுழைந்து விட்டால் அவர்களால் எந்த காரணமும் மாற்றிக் கொள்ள முடியாது.
  • மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு எதையும் செய்வார்கள். ஒருபோதும் துரோகம் செய்வதைப் பற்றி யோசிக்கமாட்டார்கள். 
கடகம்
  • கடக ராசியின் அதிபதியாக சந்திரன் இருக்கிறார். அவர்கள் அமைதி மற்றும் கண்ணியமானவர்களாக இருப்பார்கள்.
  • இவர்கள் காதலிக்கும் ஆண்களை எப்போதும் ஏமாற்ற மாட்டார்கள்.
  • இந்த ராசியில் பிறந்த பெண்கள் எப்போதும் துணையை ஆதரித்து தான் வாழ்வார்கள். துணைக்கு எவ்வளவு மோசமான சூழ்நிலை வந்தாலும் அவருக்கு துணையாக நிற்கும் குணம் கடக ராசியில் பிறந்தவர்கள் மட்டுமே உள்ளது.
  • இப்படி நேர்மையின் மறு உருவமாக இருக்கும் பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் மரியாதையாகவும், கௌரவமாகவும் இருப்பார்கள்.
  • உங்கள் காதலி கடக ராசியாக இருந்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பீர்கள். 
கும்பம்
  • ஜோதிடர்களின் கூற்றுப்படி, சனிபகவான் ஆளும் ராசியாக கும்ப ராசி பெண்கள் பார்க்கப்படுகிறார்கள். இவர்கள் எப்போதும் நேர்மையானவர்களாக இருப்பார்கள்.
  • துணையின் நம்பிக்கையை ஒருபோதும் உடைக்க எண்ண மாட்டார்கள்.
  • இந்த ராசி பிறந்த பெண்கள் துணையின் தேவைகளை புரிந்து நடந்து கொள்வார்கள்.
  • கும்ப ராசி பெண்களை காதலிப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக தான் இருப்பார்கள். 
  • கடக ராசி பெண்களைப் போல இந்த ராசி பெண்களும் எப்போதும் தங்கள் காதலரை ஆதரிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.