ஜோதிடத்தில், சனி பகவான் எதிர்மறையான கிரகமாக கருதப்படுகிறார். ஒருவருடைய ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால் அவருடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகளை அவர் சந்திக்க நேரிடும்.

சனி பகவான் நீதியின் கடவுளாக குறிப்பிடப்பட்டுள்ளார். ஒருவரின் ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால், அந்த நபரின் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படும். அந்த வகையில் தற்போத நவராத்திரியின் மூன்றாம் நாளாகும்.

சக்தியின் அனைத்து வடிவங்களையும் போற்றும் நவராத்திரியின் மூன்றாம் நாள் அன்னை வாராகிக்கு உரியது. இந்த நாளில் சனி தோஷம் இருப்பவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். வாராகி வழிபாட்டை எப்படி செய்வது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

சனி தோஷம் நீங்க புரட்டாதி சனியில் வராகி அம்மனை எப்படி வழிபட வேண்டும்? | Sani Dhosam Navarathri Varahi Amman God Pray

சப்த கன்னியர்களில் ஒருவரான வாராஹி அம்மன், தெய்வ குணத்துடன் விலங்கின் ஆற்றல் கொண்டவர். ஒருபுறம் தாயை போன்ற இரக்கமும், தயாள குணம் உடையவளாக இருந்தாலும், மறுபுறம் தீமைகளை அழிக்கும், மூர்க்க குணம் உடையவர் வாராகி அம்மன் என்பதால் இவர் உக்ர தெய்வமாக வழிபடப்படுகிறார்.

சில மாந்திரீகம் செய்பவர்களும் வாராகி அன்னையை வழிபடுவது வழக்கம். எதிரிகள், தீயசக்திகள் உட்பட துயரங்கள் அனைத்தையும் போக்கக்கூடிய தெய்வமாக வாராஹி விளங்குகிறார்.

வாராஹி வழிபாடு பரவலாக இருந்தாலும், காசி மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் மட்டுமே வாராஹி அன்னைக்கு என தனி கோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சனி தோஷம் நீங்க புரட்டாதி சனியில் வராகி அம்மனை எப்படி வழிபட வேண்டும்? | Sani Dhosam Navarathri Varahi Amman God Pray

அன்னை பராசக்தியின் போர்ப்படையின் தளபதி வாராஹி அன்னை என்பதால், வாராஹியை வழிபடுபவர்களுக்குஎதிரிகளே இருக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் சனி ஆதிக்கம் செலுத்தி அவர்கள் சனியின் பிடியில் மாட்டி கஷ்டங்களை அனுபவிப்பார்கள். இவர்கள் வாராஹி அன்னையை வழிபட்டால் நிம்மதியாக வாழலாம்.

ஏழரை சனி, கண்டச்சனி என சனியின் எந்த திசை நடந்தாலும், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வாராஹி அம்மனை வழிபட்டால், சனியால் ஏற்படும் துன்பங்களில் இருந்து நிவர்த்தி கிடைக்கும்.

சனி தோஷம் நீங்க புரட்டாதி சனியில் வராகி அம்மனை எப்படி வழிபட வேண்டும்? | Sani Dhosam Navarathri Varahi Amman God Pray

இந்த வழிபாட்டிற்கு பஞ்சமி, பெளர்ணமி, அமாவாசை நாட்கள் சிறப்பானவை. கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி நட்சத்திரங்கள் பிறந்தவர்கள் வாராஹி அம்மனை வழிபட வேண்டும். மகரம், கும்பம் ராசிகளை சேர்ந்தவர்களும் வாராஹியை வழிபட்டால் கஷ்டங்கள் தீரும்.