கிராம்பு உணவிற்காக பயன்படுத்தப்படும் ஒரு சுவைசரக்கு பொருளாகும். இதில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன

கிராம்பின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இதை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கின்றது.

வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி இது. இந்த கிராம்பை நாம் தினமம் காலையில் சாப்பிடும் போது நமக்கே தெரியாமல் அத உடலில் பல மாற்றங்களை செய்யும். அது என்னென்ன மாற்றம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தினமும் காலையில் இரண்டு கிராம்பு சாப்பிடுங்க: உடலில் நடக்கும் மாற்றம் என்ன? | Eating Two Cloves Every Morning Good Result

வாயு பிரச்சனைகள்

உணவு உண்ட பிறகு பலருக்கு கட்டாயமாக வாயு பிரச்சனைகள் வரும். இதை இல்லாமல் செய்ய மருந்துகள் பயன்படுத்ததுகின்றர். ஆனால் இந்த மருந்துகளின் நீண்டகால பயன்பாடு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

எனவே வாயுப்பிரச்னையை போக்க கிராம்புபோக்க மருந்தாக செயல்படுகிறது. இதனால் வாயு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதற்கு காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரில் சில துளிகள் கிராம்பு எண்ணெயுடன்குடிப்பது நல்லது.

தினமும் காலையில் இரண்டு கிராம்பு சாப்பிடுங்க: உடலில் நடக்கும் மாற்றம் என்ன? | Eating Two Cloves Every Morning Good Result

 

சளி , தொண்டை புண்

நீண்ட நாட்கள் சளி பிரச்சனையில் சில இருப்பார்கள். இவர்கள் தினமம் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட ஒரு கிராம்பை வாயில் போட்டுக்கொள்ள வேண்டும். இதனால் சளி மற்றும் தொண்டை புண் வராமல் தடுக்கிறது. இதை செய்து இரண்டு வாரங்களில், நல்ல மாற்றங்களைக் காண மடியும்.

அதிக எடை

ஒவ்வொரு நாளும் அதிக எடையுடன் கவலைப்படுபவர்கள் கண்டிப்பாக கிராம்பு மருந்தை சாப்பிடுவது அவசியம். நீங்கள் தினம் ஒரு கராம்பு சாப்பிடும் போது உங்கள் உடல் எடையை குறைக்கலாம். கிராம்புகளில் உள்ள கூறுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகின்றன. இது எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.

தினமும் காலையில் இரண்டு கிராம்பு சாப்பிடுங்க: உடலில் நடக்கும் மாற்றம் என்ன? | Eating Two Cloves Every Morning Good Result

 

நீரிழிவு நோய்

கிராம்பு சாப்பிடுவது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில்  உள்ள நைஜெரின் என்ற பொருள் இன்சுலினை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க இரவில் கிராம்பு சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.