இயற்கையாக கிடைக்கும் உணவுப் பொருள்களில் இருந்தே நம் உடலுக்கு தேவையான சத்துகளை எளிதாகப் பெற முடியும்.

சில நோய்களுக்கு மருந்தாகவும் சமையலறை பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், நெய்யுடன் நாளைத் தொடங்குவது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.   

தினசரி காலையில் ஒரு ஸ்பூன் நெய்.., இந்த நோய்கள் அனைத்தும் நீங்கிவிடும் | Benefits Of Eating A Spoonful Of Ghee Morningநெய்யில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் டி ஆகியவை உள்ளதால் ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு அமைப்பின் ஆதரவு, தோல் ஆரோக்கியம், எலும்பு வலிமை போன்றவற்றிற்குப் பங்களிக்கிறது.

இதில் உள்ள ஆண்டி-ஆக்சிடண்ட்ஸ் , உடலில் ஒவ்வாமை எதிர்ப்புப் பண்புகளை வளர்க்க உதவுகின்றன.

காலையில் நெய்யை உட்கொள்வது மற்ற உணவுகளில் இருந்து கொழுப்பில் கரையக்கூடிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.  

மேலும், இது மூட்டு ஆரோக்கியத்திற்கு உதவி உடல் நலத்திற்குப் பயனளிக்கும்.

 

தினசரி காலையில் ஒரு ஸ்பூன் நெய்.., இந்த நோய்கள் அனைத்தும் நீங்கிவிடும் | Benefits Of Eating A Spoonful Of Ghee Morning

இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அதன் காரணமாக ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

மேலும், நெய்யில் ப்யூட்ரிக் அமிலம் உள்ளது. இது குடல் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது.

காலையில் நெய்யைச் சாப்பிடுவதால் குடலில் உள்ள பாக்டீரியாவின் ஆரோக்கியமான சமநிலையை ஊக்குவிக்க முடியும்.

இதில் மீடியம் செயின் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை எளிதில் செரிமானம் ஆகக்கூடியது  நாள் முழுவதும் நிலையான ஆற்றலை வழங்கும். மேலும், மனநிறைவான உணர்வையும் ஊக்குவிக்கின்றன.