கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,960 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து இன்று 68,416 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 7,70,768-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,442-ஆக அதிகரித்துள்ளது.