நமது ராசி எப்படி நம் எதிர்காலத்தை கணிக்கிறடீதா அதே அளவிற்கு எண்கணிதமும் உதவுகிறது. இந்த எண்கணிதத்தின் மூலம் உங்கள் ஆளுமை மற்றும் உங்கள் பலம் பலவீனம் என்பவற்றை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.
இந்த எண்கணிதம் ஒருவர் எப்படி வாழ்வார் அவரின் எதிர்காலத்தை அவர்கள் எப்படி அமைத்துக்கொள்கின்றனர் என்பது பற்றி கூறுகின்றது. ஒரு பெண் ஒரு ஆண் சேர்ந்து வாழ்வதாக இருந்தால் அவர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும்.
இந்த புரிந்துணர்வு எண்கணிதம் மூலம் கணிக்கப்படுகின்றது. அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களின் கூடுதலாக பெண்களுக்கு என்ன ஆளுமை இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
ஜனவரி
- பெண்களின் பிறந்த மாதங்களின் அடிப்படையில் அவர்களின் ஆளுமைகளை தெரிந்து கொள்ளலாம்.
- மேலும் உங்கள் வருங்கால வாழ்க்கை துணை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
- ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் பார்ப்பதற்கு மற்றவர்களை ஏதோ ஒரு விஷயத்தில் கவரும் வண்ணம் இருப்பார்கள்.
- இவர்கள் விலையுயர்ந்த பொருட்களை விரும்புவாாகள்.
- எனவே இவர்களின் துணை இதை ஏற்றுக்கொள்ளும் நபராக இருக்க வேண்டும்.
- எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு விஷயத்தின் மீது ஆசைப்படுகிறார்களோ, அதே அளவு அதை சீக்கிரம் வெறுத்தும், சலித்தும் விடுவார்கள்.
- இவர்கள் உணர்திறன் அதிகம் கொண்டு இருப்பதால் தொழில் வாழ்க்கையில் லட்சியத்துடன் செயல்படுவார்கள்.
பிப்ரவரி
- பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் புத்திசாலிகள் தான், ஆனாலும் தந்திரமாக செயல்படுவார்கள்.
- அவர்களின் ஆளுமை எல்லோரும் விரும்பும் போல கவர்ச்சிகரமானது.
- ஆனால் அவர்கள் இயற்கையாகவே கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகின்றது.
- தன்னை மதிக்கும் தன்னிடம் அன்பாக இருப்பவர்களுக்கு அன்பும், பாசமும் நிறைந்தவர்களாக இருப்பதால், அதிக நண்பர்களை உருவாக்க முயற்சிப்பார்கள்.
- இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் சுதந்திரத்தை விரும்புவார்கள் என்பதால், அதற்கு இடையூறாக யாராவது வந்தால் அன்று முதல் அவர்கள் எதிரிதான்.
மார்ச்
- இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மென்மையான இயல்புடையவர்கள்.
- இவர்கள் தூய்மை எண்ணம் கொண்டிருப்பதால் மற்றவர்களுக்கு மிகவும் நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.
- இவர்கள் ஒருவர் தன்னை நம்பி கூறும் ரகசியத்தை தன்னுள் மறைத்து வைப்பதிலும் வல்லவர்களாக திகழ்வார்கள்.
- இவர்கள் அதிகம் நம்பிக்கையுடையவர்கள் என்பதால், மற்றவர்கள் இவர்களை நம்பலாம்.
- போதுமாவரை இவர்கள் தங்களிடம் எல்லோரும் உண்மையாக இருக்க வேண்டும் என நினை்பபார்கள்.
ஏப்ரல்
- ஏப்ரல் மாதம் பிறந்தவர்கள் மென்மையானவர்களாக இருப்பார்கள்.
- அவர்களின் செயல்கள் பார்ப்பவர்களை மகிழ்ச்சியாகவும், வேடிக்கையாகவும் இருப்பதால் பலரும் அவர்களை நேசிப்பார்கள்.
- ஆனால் அவர்களிடம் பிடிவாத குணம் அதிகமாக இருக்குமாம். மேலும் இந்த மாதத்தில் பிறந்த நபர்கள் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக இருப்பார்களாம்.
- இப்பொது திருமண வாழ்க்கையில் நீங்கள் ,ர்படுகிறீர்கள் என்றால் இம்மாதத்தில் பிறந்தவர்களை உங்களின் ஆளுமைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கலாம்.
- சிலர் ஏற்கனவே உறவில் இருந்தால் அவர்கள் இவர்களின் குணத்திற்கு ஏற்றதை போல மாற்றி மகிழ்ச்சியாக நடந்து கொள்ளுங்கள்.