பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது.
பஞ்சாங்கத்தின்படி, ராகு பகவான் கடந்த 30 அக்டோபர் 2023ஆம் ஆண்டு முதல் மீன ராசியில் சஞ்சரித்து வருகிறார்.
அதே சமயம், கடந்த 30 அக்டோபர் 2023 முதல் கேது கிரகம் கன்னி ராசியில் வீட்டிருக்கிறார். அடுத்த 2025ஆம் ஆண்டில், ராகு-கேது 18 மே 2025-அன்று தற்போது இருக்கும் ராசியிலிருந்து மாறுவார்.
இந்த நாளில், ராகு பின்னோக்கி நகர்ந்து கும்ப ராசிக்கு செல்வார். அதே போல் கேது சிம்ம ராசியில் நுழைவார்.
அந்த வகையில் இந்த ராகு - கேது பெயர்ச்சியால் அடுத்த ஆண்டு உச்சத்திற்கு செல்லப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. மிதுனம்
எதிர்வரும் 2025ஆம் ஆண்டு நடக்கும் ராகு - கேதுவின் பெயர்ச்சி மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு நன்மை உண்டாகும்.
- அடுத்த வருடம் நீங்கள் செய்யும் பணியில் முன்னேற்றம் இருக்கும். பயணங்கள் நன்மையானதாக அமையும்.
- பொருளாதார நிலை மிதுன ராசியினருக்கு மேம்பட்டு செல்வம் பெருக ஆரம்பிக்கும்.
- தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களை காண்பீர்கள்.
- வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறுவீர்கள்.
2. மகரம்
- மகர ராசிக்காரர்களுக்கு, 2025ஆம் ஆண்டு நடக்கும் ராகு - கேதுவின் பெயர்ச்சியால் மிகப் பெரிய நன்மை வந்து சேரும்.
- திடீர் நிதி ஆதாயங்கள் வீடு தேடி வருவதற்கான வாய்ப்பும் உள்ளது.
- பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து விடுபட்டு ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ அதிர்ஷ்டம் உள்ளது.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு வீட்டிலிருந்து கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.
- தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதா? என எதிர்ப்பார்த்து காத்திருந்த போது அடுத்த வருடம் மங்களமாக அமையும்.
- தனியாக வியாபாரம் செய்பவர்கள் அடுத்த வருடம் கொள்ள லாபம்பார்ப்பீர்கள்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
3. கும்பம்
- கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு அடுத்த வரும் நடக்கும் ராகு - கேதுவின் பெயர்ச்சியால் மங்களம் உண்டாகும்.
- அந்த சமயத்தை பயன்படுத்தி வணிகங்களை ஆரம்பிக்கலாம். இதனால் நிதி வரவு நிரந்தரமாகி விடும்.
- லௌகீக வசதிகளுடன் வாழ்க்கை வாழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
- சமூகத்தில் கௌரவம் நிலைத்திருக்கும்.
- நிலம், வாகனம் வாங்கினால் அதனால் வீட்டுக்கு புது யோகம் வந்து சேரும்.
- பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும்.