எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.

அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

Numerology: இந்த தேதியில் பிறந்தால் மன்னிக்கும் குணம் துளியும் இருக்காதாம்..பழிவாங்கியே தீரும் ஆட்கள் யார் தெரியுமா? | Numerology Born These Dates Never Forgive Haters

எண் கணிதத்தின் படி, சில தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் மனதில் எப்போதும் மனக்கசப்பை சுமந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் முந்தையதாக நடந்த பிரச்சினைகளை மறக்கவும் மன்னிக்கவும் மாட்டார்கள்.

அந்த வகையில் பழிவாங்கும் குணம் கொண்டவர்கள் எந்த திகதியில் பிறந்திருப்பார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. எண் 1

  • 12 மாதங்களில் 1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு எண் 1 ஆக இருப்பார்கள். இவர்கள் மன உறுதி மற்றும் பிடிவாதம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • இந்த எண்ணில் பிறந்தவர்கள் மனக்கசப்பை சுமந்து கொண்டிருப்பார்கள்.
  • கருத்து வேறுபாடுகள் காரணமாக பல சண்டைகளை பிடிப்பார்கள்.
  • பிரச்சினைகள் என வந்து விட்டால் பின்வாங்க மறுக்கமாட்டார்கள்.
  • எண் 1 ஆக பிறந்தவர்கள் வலுவான சுய மரியாதையைக் கொண்டீருப்பார்கள். அதற்கு பிரச்சினை வரும் போது காத்திருந்து பழிவாங்குவார்கள். 
  •  வாழ்க்கையில் முந்தைய பிரச்சினைகளை விட்டுவிடுவது கடினமாக இருக்கும்.
  • பாதிப்படைவதில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் என நம்புவார்கள். 

Numerology: இந்த தேதியில் பிறந்தால் மன்னிக்கும் குணம் துளியும் இருக்காதாம்..பழிவாங்கியே தீரும் ஆட்கள் யார் தெரியுமா? | Numerology Born These Dates Never Forgive Haters

2. எண் 9

  • 9, 18, 27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் எண் 9 ஆக இருக்கும். இவர்கள் அதிகமான உணர்திறன் வாய்ந்தவர்கள் மற்றும் கனிவானவர்களாக இருப்பார்கள்.
  • வலுவான உணர்ச்சிகள் இவர்களிடம் இருக்கும்.
  • சாதகமற்ற உணர்வுகளை விட்டுவிடவும் கடந்தகாலங்களில் ஏற்பட்ட காயங்களிலிருந்து வெளிவரவும் எண் 9 பிறந்தவர்கள் போராடலாம்.
  • எதிர்காலத்தில் காயமடைவதைத் தவிர்ப்பதற்காக எப்போதும் பாதுகாப்புடன் இருப்பார்கள்.
  • மனதில் எப்போதும் வெறுப்பைக் கொண்டிருப்பார்கள். 

Numerology: இந்த தேதியில் பிறந்தால் மன்னிக்கும் குணம் துளியும் இருக்காதாம்..பழிவாங்கியே தீரும் ஆட்கள் யார் தெரியுமா? | Numerology Born These Dates Never Forgive Haters

3. எண் 4

  • 4, 13, 22, 31 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் ஒழுக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். மற்ற எண்களில் பிறந்தவர்களை விட யதார்த்தமானவர்களாக இருப்பார்கள்.
  • பிடிவாதத்தால் மனக்கசப்பை ஏற்படுத்தி கொள்வார்கள். வலுவான உணர்வைக் கொண்டிருப்பார்கள்.
  • பாதிப்பு ஏற்படுத்தியவர்களை ஒரு காலமும் மன்னிக்க மாட்டார்கள்.
  • வாழ்க்கைப் பாதை எண் 4 உள்ளவர்கள் தங்கள் ஒழுக்கங்களையும் நம்பிக்கைகளையும் நிலைநிறுத்துவார்கள். 

Numerology: இந்த தேதியில் பிறந்தால் மன்னிக்கும் குணம் துளியும் இருக்காதாம்..பழிவாங்கியே தீரும் ஆட்கள் யார் தெரியுமா? | Numerology Born These Dates Never Forgive Haters