ஜோதிடத்தின் படி, நீதியின் கடவுளாக சனி பகவான் பார்க்கப்படுகிறார்.

சனி பகவான் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு செல்வதற்கு சரியாக 2 1/2 ஆண்டுகள் எடுத்து கொள்வார்.

தற்போது சனி பகவான் அவருடைய மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து கொண்டிருக்கிறார்.

கும்ப ராசியில் வக்ர நிலையில் இருக்கு சனி பகவான், வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் அதாவது நவம்பர் 15 ஆம் திகதி வக்ர நிவர்த்தி அடைகிறார்.

இந்த நிலையில் சனி பகவான் பயணிப்பதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். அதிலும் குறிப்பிட்ட 3 ராசிகளில் சனி வக்ர நிவர்த்தியடையும்.

அந்த வகையில், தீபாவளிக்கு பின்னர் அதிர்ஷ்டம் நிறைந்தவர்களாக இருக்கப்போகும் ராசிக்காரர்கள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். 

1. மிதுனம்

சனி வக்ர நிவர்த்தி: தீபாவளிக்கு பின் ராஜ வாழ்க்கை வாழப்போகும் 3 ராசிக்காரர்கள் யார் தெரியுமா? | Sani Vakra Nivarthi Zodiac Signs Lucky

  • மிதுன ராசி 9 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.
  • வணிகத்தில் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
  • கடன் பிரச்சனையுள்ளவர்கள் இந்த காலப்பகுதியில் அதிலிருந்து விடுபடுவார்கள்.
  • சிலருக்கு நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத பிரச்சினைகள் இருக்கும். இது போன்ற பிரச்சினைகள் சனி வக்ர நிவர்த்தி நடக்கும் போது இல்லாமல் போக வாய்ப்பு இருக்கிறது.
  • குடும்பத்தில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு உங்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்.
  • உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் உங்களின் இலக்குகளை எளிதில் அடைந்து கொள்வீர்கள்.
  • வெளிநாட்டில் படிக்க விரும்பினால் இந்த நாட்களில் உங்களுக்கான வாய்ப்பு உங்களை தேடி வரும். 

2. மேஷம்

சனி வக்ர நிவர்த்தி: தீபாவளிக்கு பின் ராஜ வாழ்க்கை வாழப்போகும் 3 ராசிக்காரர்கள் யார் தெரியுமா? | Sani Vakra Nivarthi Zodiac Signs Lucky

  • மேஷ ராசியில் 11 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் மற்றவர்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
  • பல துறைகளில் சாதனைகள் செய்ய வாய்ப்பு உள்ளது.
  • புதிய வேலை, வருமானம் என சந்தோஷமாக வாழ்க்கை நடத்துவீர்கள்.
  • தொழிலில் இதுவரை காலமும் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
  • வேலை தேடுபவர்களாக இருந்தால் சனி பெயர்ச்சியால் நல்ல வேலை கிடைக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
  • புதிய வணிகம் ஆரம்பித்திருந்தால் தீபாவளிக்கு பின் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள் இந்த காலப்பகுதியில் முடிவுக்கு வரும்.
  • குடும்பத்தில் உள்ளவர்களின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.         

3. மகரம்

சனி வக்ர நிவர்த்தி: தீபாவளிக்கு பின் ராஜ வாழ்க்கை வாழப்போகும் 3 ராசிக்காரர்கள் யார் தெரியுமா? | Sani Vakra Nivarthi Zodiac Signs Lucky

  • மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார்.
  • இதுவரை உங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்.
  • நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் இந்த காலப்பகுதியில் வெற்றிகரமாக முடிடையலாம்.
  • சனி பகவானின் அருளால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
  • பணிபுரிபவர்களின் வருமானம் கணிசமாக அதிகரிக்கும்.
  • பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளிடமிருந்து பாராட்டுக்களைப் பெற வாய்ப்பு உள்ளது.
  • புதிய வேலை தேடுபவர்களாக இருந்தால் நல்ல வேலைகள் கிடைக்கும்.
  • காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.