சனியின் ஆதிக்கம் கொண்ட நாட்களில் பிறந்தவர்களுக்கு சனி பகவானால் பெரியளவு தொந்தரவுகள் ஏற்படாது.

அதே சமயம் இந்த எண்களில் பிறந்தவர்களுக்கு சனியால் வரும் அதிர்ஷ்டங்கள் கூட கொஞ்சம் தாமதமாகவே கிடைக்கும்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, எண்களில் பல பிரிவுகள் உள்ளன. இந்த எண்களில் பிறந்த நபர்களின் குணங்கள் சற்று வித்தியாசமாக இருக்கும்.

சனியின் ஆதிக்கம் கொண்ட தேதிகளில் பிறந்தவர்களுக்கு சனி பகவானால் பெரிய தொந்தரவுகள் இருக்காது. மாறாக சனியின் ஆதிக்கம் கொண்ட எண்களில் பிறந்தவர்களுக்கு, கொஞ்சம் தாமதமாகவே பலன்கள் கிடைப்பதாக எண் கணித ஜோதிடம் கூறுகிறது.

அந்த வகையில் யார் சனியில் ஆதிக்கம் கொண்ட நாட்களில் பிறந்தவர்கள் என்று தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு சனி தொந்தரவு இருக்காதாம்- எண்கணிதம் சொல்வது சரியா? | People Born In These Dates Saturn Numerology

பிற தேதிகளில் பிறந்தவர்களுடன் ஒப்பிடும் போது, 8, 17, மற்றும் 26 ஆகிய மூன்று தேதிகளில் பிறந்தவர்களுக்கு சனி பகவானால் பெரியளவு பாதிப்பு வராது. இவர்கள் சனி பகவானின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் என்றும் கூறப்படுகின்றது. அதே சமயம் இந்த வருடம் முழுவதும் இந்த திகதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.

1. தேதி 8

ரேடிக்ஸ் எண் 8இல் பிறந்தவர்களுக்கு சனி ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும். இவர்கள் அதிகமான தன்னம்பிக்கையை கொண்டிருப்பார்கள். அத்துடன் எண்ணங்களை யாரிடமும் அவ்வளவு எளிதாகப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். அதே போன்று அவர்களிடம் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு இருக்கும். இதனால் அவர்களின் இலக்குகளை கூடிய சீக்கிரம் அடைந்து விடுவார்கள்.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு சனி தொந்தரவு இருக்காதாம்- எண்கணிதம் சொல்வது சரியா? | People Born In These Dates Saturn Numerology

2. தேதி 17

12 மாதங்களில் எந்த மாதத்திலும் 17 ஆம் தேதி பிறந்தவர்களின் கூட்டெண் 8 ஆக இருக்கும். இவர்கள் அதிகமாக வெளி பயணங்களை விரும்புவர்களாக இருப்பார்கள். எப்போதும் தெளிவான எண்ணங்கள் இவர்களிடம் பார்க்கலாம். எந்த செயல் செய்தாலும் அதில் நிதானம் மற்றும் அர்ப்பணிப்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு சனி தொந்தரவு இருக்காதாம்- எண்கணிதம் சொல்வது சரியா? | People Born In These Dates Saturn Numerology

3. தேதி 26

26 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு பொறுமை மிகவும் அதிகமாக இருக்கும். அதிர்ஷ்டம் இவர்கள் சார்பாக இருப்பதால் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுப்பார்கள். எப்போதும் பயனற்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பமாட்டார்கள். பணத்தையும் நேரத்தையும் செலவழிக்க விரும்ப மாட்டார்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும் வரை போராடுவார்கள்.        

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு சனி தொந்தரவு இருக்காதாம்- எண்கணிதம் சொல்வது சரியா? | People Born In These Dates Saturn Numerology