சிறந்த உணவுகள் என கூறும்போது நமது ஞாபகத்திற்கு நட்ஸ்களும், விதைகளும் தான் வரும்.

விதைகள் எனக் கூறும் போது அநேகமானவர்கள் ​​சூரியகாந்தி விதைகளை அதிகமாக உணவுடன் எடுத்துக் கொள்வார்கள்.

சூரியகாந்தி விதைகள் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அதில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது.

எடை குறைப்பு முதல், இதய ஆரோக்கியம் வரை அனைத்திற்கு இவை உதவியாக இருக்கிறது.

இந்த சிறிய விதைகள் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளையும் ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றது.

அந்த வகையில் சூரியகாந்தி விதைகள் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

வேகமாக எடை குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பொருளை தினமும் சாப்பிடுங்க- 15 நாட்களில் பலன் | Benefits Of Sunflower Seeds In Diet1. சூரியகாந்தி விதைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளன. இது சாப்பிடுவதால் பசி கட்டுபடுத்தப்படுகின்றன. டயட் பிளானில் இருப்பவர்கள் அவர்களின் உணவுடன் இந்த விதைகள் எடுத்து கொள்ளலாம். எடையும் குறையும்.

2. சூரியகாந்தி விதைகளில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் போன்ற பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதய நோய் அபாயம் உள்ளவர்கள் இது போன்ற ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை அடிக்கடி உணவுடன் எடுத்து கொள்ளலாம்.

வேகமாக எடை குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பொருளை தினமும் சாப்பிடுங்க- 15 நாட்களில் பலன் | Benefits Of Sunflower Seeds In Diet3. வைட்டமின் ஈ மற்றும் செலினியம் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சூரியகாந்தி விதைகளில் நிறைந்துள்ளன. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஈ உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் வீக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதனால் நாள்பட்ட நோய்களின் அபாயம் குறைக்கிறது.