சில ராசிக்காரர்கள் எதிர்காலத்திற்கான முதலீடு செய்வதில் கவனமாக இருப்பார்கள்.

இன்னும் சிலர் பிறந்தது முதல் இறப்பு வரை பணத்தில் புரள்வார்கள். 

இதற்கு முக்கிய காரணமாக அவர்களின் ஜாதகம் பார்க்கப்படுகின்றது.

இந்த அவசர உலகில் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அவற்றை தக்க வைப்பது என்பது கடினமான விடயமாக உள்ளது. பணம் சேமிப்பதில் வல்லவர்களாக இருப்பவர்களின் எதிர்காலம் பிரகாசமானதாக இருக்கும்.

ஜோதிடத்தின் படி, சனி தேவன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் போது அனைத்து ராசியினருக்கும் சுப மற்றும் அசுப நிகழ்வுகள் நடக்கும்.

அந்த வகையில் 100 நாட்களுக்குப் பிறகு சனிபெயர்ச்சி நடக்கவிருப்பதால் குறிப்பிட்ட சில ராசிக்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். அப்படியான ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.     

1. மிதுன ராசி

  • வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்களைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
  • பல நாள் எதிர்பார்த்திருந்த மாற்றங்களை இந்த காலப்பகுதியில் பார்க்கலாம்.
  • வழக்கத்திற்கு மாறாக சமூகத்தில் மரியாதை கிடைக்கும். நிகழ்வுகளில் அதிகமாக கலந்து கொள்வீர்கள்.
  • குழந்தை தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
  • எவ்வளவு பணம் கிடைத்தாலும் இந்த காலப்பகுதியில் சேர்த்து வைப்பது சிறந்தது.

100 நாட்களுக்குப் பிறகு வரும் சனிபெயர்ச்சி- பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார் தெரியுமா? | After 100 Days Saturn Move Into Aquarius

2. சிம்ம ராசி

  • சிம்ம ராசியினருக்கு வேலையில் வெற்றி கிடைக்கும்.
  • செயல்திறன்கள் அதிகரித்து நீண்ட நாள் முடிக்காமல் இருந்து வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
  • நீண்ட நாட்கள் காத்திருந்தும் கிடைக்காத நல்ல செய்திகள், இந்த காலப்பகுதியில் கிடைக்கும்.
  • சனி பெயர்ச்சியால் தன்னம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருத்திருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் வீடு தேடி வரும்.

100 நாட்களுக்குப் பிறகு வரும் சனிபெயர்ச்சி- பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார் தெரியுமா? | After 100 Days Saturn Move Into Aquarius

3. தனுசு ராசி

  • தனுசு ராசினருக்கு திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும்.
  • வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நீங்கள் பணிபுரிபவர்கள் என்றால் மாத சம்பளத்தில் உயர்வு ஏற்படும்.
  • நாளுக்கு நாள் வங்கி இருப்பு அதிகரிக்கும்.
  • பிறருக்கு கடன் கொடுத்து சிக்கிய பணம் இந்த நாட்களில் கைக்கு வந்து சேரும்.
  • பேச்சால் பலரை ஈர்த்து உங்கள் வேலையை சிறப்பாக முடித்து கொள்வீர்கள்.
  • வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.

100 நாட்களுக்குப் பிறகு வரும் சனிபெயர்ச்சி- பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார் தெரியுமா? | After 100 Days Saturn Move Into Aquarius