கடக ராசியில் சஞ்சரிக்கப்போகும் சுக்கிரனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும் என்ற விபரத்தினை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசிக்கு செல்லும் சுக்கிரன் விரைவில் தனது ராசியை மாற்றுவார். கடகம் புதன் கிரகத்தின் ராசி என்றும் புதன் சுக்கிரனின் நண்பன் என்றும் கூறப்படுகின்றது.

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் அசுப பலன்களைத் தந்தாலோ அல்லது மோசமான நிலையில் இருந்தாலோ இந்தக் காலத்தில் அவர்களின் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும்.

ஆனால் யார் ஜாதகத்தில் சுக்கிரன் சுபமாக இருக்கின்றாரே அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும். இந்நிலையில் கடகத்தின் சுக்கிரம் நுழைவதால் எந்த ராசியினருக்கு பேரதிர்ஷ்டம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

 

மேஷம்

மேஷ ராசியினரின் ஜாதகத்தில் சுக்கிரன் நான்காம் வீட்டில் கடக ராசிக்கு மாற்றமடைவதால், குடும்பத்தில் அமைதியான சூழல் ஏற்படுவதுடன், மகிழ்ச்சியும் ஏற்படும். அனைத்து வேலையிலும் முன்னேற்றத்தினை காணும் நீங்கள் திருமண வாழ்விலும் மகிழ்ச்சியாகவே இருப்பீர்கள். பண ஆதாயத்துடன், பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம்.

 

கடகம்

கடக ராசியினருக்கு சுக்கிரனின் பெயர்ச்சி சாதகமாக இருப்பதால், பணியிடத்தில் சிறப்பான பலன்களை பெறுவதுடன், எதிர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும் செய்வீர்கள்.

தொழில் வியாபாராத்தில் நல்ல முன்னேற்றம் அடையும் நிலையில், நிதி ஆதாயமும் உண்டாகும். குடும்பத்தில் அன்பு, ஐக்கியம் அதிகரிக்கும் ஆனால் செலவுகளைவு கட்டுப்படுத்த வேண்டும்.

விருச்சிகம்

சுக்கிர ராசி மாற்றத்தினால் விருச்சிக ராசியினருக்கு வெளிநாடு செல்லவும் வாய்ப்புள்ளதுடன், மனம் மகிழ்ச்சியுடன் இருக்கும். முதலீடு செய்தால் லாபம் ஏற்படுவதுடன் பணமும் அதிகமாகவே புரளும். நீங்கள் புத்திசாலித்தனமாக பணத்தை செலவு செய்ய வேண்டும்.

 

மீனம்

சுக்கிரனின் கடக ராசியில் சஞ்சாரம் மீன ராசியினருக்கு சாதகமான வாழ்க்கைத் துணையை கொடுப்பதுடன், அன்பு அதிகரித்து, பல நாட்களாக தொடரும் மனஸ்தாபம் இந்த நேரத்தில் நீங்கும்.மாணவர்கள் சில சிரமத்தினை சந்திக்க நேரிடலாம். ஆனால் புதிய சொத்து வாங்கும் வாய்ப்பும் ஏற்படும், பல வாய்ப்புகளை பெறும் உங்களுக்கு எல்லாம் நன்மையாகவே முடியும்.