பொதுவாக விலங்குகளில் சில முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன, சில குட்டிகளை ஈனுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் உலகில் ஒரு உயிரினத்தால் முட்டைக்குள் இருக்கும் போதே பாடவும் பேசவும் முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? 

குட்டி விலங்குகள் முட்டைக்குள் இருக்கும்போதே பேசத் தொடங்குகின்றன என்பதை சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி மாணவரான கேப்ரியல் ஜார்ஜீவிச் கோஹன் கண்டறிந்துள்ளார். இது எந்த உயிரினம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

உயிரினத்திற்கும் ஒவ்வொரு வகையில் தனித்துவமான மற்றும் வினோதமான பழக்கங்கள் காணப்படுகின்றது. 

அந்த வகையில்  முட்டைக்குள் இருந்து பேசும் அந்த உயிரினம் ஆமை தான். கேப்ரியல் ஜார்ஜீவிச் கோஹென் ஒரு சிறப்பு மைக் மூலம் ஆமைகள் முட்டைக்குள் இருக்கும் போது கூட ‘பேசும்’ என்பதை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். 

முட்டைக்குள் இருக்கும்போதே பேசும் உயிரினம் எதுன்னு தெரியுமா? பலரும் அறியாத வியத்தகு தகவல்! | Which Animals Start Talking Singing Inside The Egg

மேலும் ஆமைக் குஞ்சுகள் முட்டைக்குள் இருக்கும் போது  ஒரு வகையான பாடலைப் பாடுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார். கோஹன் கண்டுபிடித்தபடி, அதன் அடிப்படையில் ஆடை குஞ்சுகள் தங்கள் சுவாசத்தின் மூலம் தொடர்பு கொள்வதாக தெரியவருகின்றது. 

முட்டைக்குள் இருக்கும்போதே பேசும் உயிரினம் எதுன்னு தெரியுமா? பலரும் அறியாத வியத்தகு தகவல்! | Which Animals Start Talking Singing Inside The Egg

ஆமை குஞ்சுகள் ஒரே நேரத்தில் முட்டைக்குள் இருந்து வெளிவருவதற்காக இவ்வாறு பாடுகின்றன.கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிய புதிய தகவல்களைக் கண்டறிவதுடன் - பரிணாம வளர்ச்சியைப் பற்றிய சில அற்புதமான புதிய தகவல்களைக் கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள்.

முட்டைக்குள் இருக்கும்போதே பேசும் உயிரினம் எதுன்னு தெரியுமா? பலரும் அறியாத வியத்தகு தகவல்! | Which Animals Start Talking Singing Inside The Eggஅதன் அடிப்படையில் குஞ்சு பொரிக்கும் போது வேட்டையாடுபவர்களிடமிருந்து அவற்றைப் பாதுகாத்துக் கொள்ளவும் இது ஒரு சிறந்த வழியாக இருக்கின்றது. 

அது மட்டுமன்றி தாய் ஆமையுடன் தொடர்பு கொள்ளவும் இந்த முறையை பின்பற்றுகின்றன. அந்த ஒலியை வெறும் காதுகளால் கேட்க முடியாது என்றாலும், உணரமுடியும் என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவருகின்றது.