கனவு என்பது பொதுவாக எல்லாருக்கும் வரக்கூடிய ஒன்று.
கனவுகள் வராதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் ஏன் இந்த கனவு வருகின்றது என்பதில் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும்.
சில வேளைகளில் கனவுக்குரிய விளக்கம் தெரியாமல் குழம்பி போய் இருப்பார்கள்.
இப்படி வரும் கனவுகள் எமக்கு ஏதோவொரு விடயத்தை உணர்த்துவதற்காகவும் அல்லது எம்மிடம் யாராவது முக்கியமான விஷயம் ஒன்றை கூற முனைவதற்காகவும் வருகின்றன என்பது ஐதீகம்.
அப்படியான கனவுகள் என்ன என்ன என்பதையும் எதற்காக கனவுகள் தோன்றுகிறது என்பது பற்றியும் தெரிந்துக்கொள்வோம்.
கனவுகளின் பலன்கள்
1. தெய்வீகம் தொடர்பான கனவுகள்
- தெய்வீக சம்பந்தப்பட்ட கனவுகள் வந்தால் பல்வேறுப்பட்ட நன்மை கிடைக்கும்.
- தீராத பிரச்சனைகள் தீர போகிறது என்று அர்த்தம்.
- நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.
2. ரயிலை தவறவிடுவது போன்ற கனவுகள்
- நாம் ஏற வேண்டிய ரயிலை தவற விடுவது போன்று கனவு வந்தால் மரணத்தைப் பற்றிய பயத்தை வெளியிடுகிறது.
- குறுகிய காலத்தில் இறந்து விடுவோம் என்று நம்முடைய கனவு எமக்கு உணர்த்துகிறது.
3. போர்க்களம்
- மனநிலை சரியான நிலையில் இல்லாத போது இந்த மாதிரியான கனவுகள் தோன்றும்.
- போர்க்களம் வந்தால் கனவுகள் தோன்றினால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது.
- பலமான மன அழுத்தத்தில் இருப்பீர்கள் என்று அர்த்தம்.
4. இறந்தவர்கள் கனவில் வருதல்
- நம்முடைய வீட்டில் யாராவது இறந்து இருப்பார்கள் அவர்கள் கனவில் தோன்றி ஏதோவொன்றை கூற வருகிறார்.
- சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.
- கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.