ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் தனித்துவ குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே தங்களின் நலகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி சுயநலனுக்காக எதையும் செய்ய துணியும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்றவர்களின் ஆசைகள் மற்றும் உணர்வுகள் குறித்து சிந்திக்கும் தன்மையற்றவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிய கவலை இவர்களும் ஒருபோதும் இருக்காது.மற்றவர்கள் பாதிக்கப்படுவதையும் இவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.
தங்களின் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இரட்டை இயல்புகொண்டவர்களாக இருப்பார்டகள்.அவர்கள் தங்களின் உள்ளுணர்வுகளை யாரிடமும் வெளிப்படுத்த மாட்டார்கள்.
எப்போதும் மர்மம் நிறைந்தவர்களாக இருக்கும் இவர்கள் சுயநலனுக்கான எதையும் செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் அறிவுத்திறனையும், புத்திசாலித்தனத்தையும் மிகப்பெரிய சொத்தாக மதிப்பதால், தங்களின் நலம் கருதி மட்டுமே எந்த முடிவையும் எடுப்பார்கள்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே சாகச விரும்பிகளாக இருப்பார்கள்.இவர்கள் தங்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
இவர்கள் தங்களின் உறவுகளை சுயநலனுக்காக கட்டுப்படுத்தி வைக்க நினைக்கும் அதே நேரம், மற்றவர்கள் இவர்களை கட்டுப்படுத்த விரும்ப மாட்டார்கள்.
அவர்கள் தங்கள் சுதந்திரத்திற்காக சுயநலமாக செய்ற்படும் போது மற்றவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பது குறித்து கவலையடைய மாட்டார்கள்.