பொதுவாகவே  உடல் இயற்கையாகவே உற்பத்தி செய்து கொள்ளக் கூடிய சத்துக்களில் ஒன்று தான் வைட்டமின் டி. சூரிய ஒளி நம் மீது பட்டாலே போதும் உடல் தானாகவே வைட்டமின் டி யை உற்பத்தி செய்துக்கொள்ளும். 

அதிலும் காலை மற்றும் மாலை நேர இதமான சூரிய ஒளியில் வைட்டமின் டி சத்து அபரிமிதமாக கிடைக்கும். இலங்கை, இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வைட்டமின் டி பற்றாக்குறையை யாரும் எதிர் நோக்க வேண்டிய அவசியமே இருக்காது என பெரும்பாலானவர்கள் நினைக்கின்றார்கள்

உலகளாவிய ரீதியில்  79 சதவீத ஆண்களுக்கும், 75 சதவீத பெண்களுக்கும் வைட்டமின் டி சத்து பற்றாக்குறைபாடு காணப்படுவதாக ஆய்வுகள் தகவல்கள் குறிப்பிடுகின்றனர். 

வைட்டமின் டி சத்து குறைபாடு இருந்தால், ஒருவர் பலவீனமாகவும், சோர்வாகவும் உணர்வார்கள். மருத்துவர்கள் சோதித்தால் மட்டுமே இந்த குறைபாடு இருப்பது தெரியும்.

எச்சரிக்கை! வைட்டமின் டி இல்லையென்றால் உங்க உடம்பில் இந்த விடயங்கள் நடக்காது | What Are The Most Important Benefits Of Vitamin Dபலர் இதனை கண்டுகொள்ளாமலேயே விட்டுவிடுதால், காலப்போக்கில் ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வைட்டமின் டி பற்றாக்குறையால் எதிர்நோக்க கூடிய முக்கிய ஆரோக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

வைட்டமின் டி கால்சியத்தை உறிஞ்சுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது போதுமான அளவில் இல்லாதபோது, உணவில் இருந்து கால்சியத்தை உடலால் உறிஞ்ச முடியாது.

எச்சரிக்கை! வைட்டமின் டி இல்லையென்றால் உங்க உடம்பில் இந்த விடயங்கள் நடக்காது | What Are The Most Important Benefits Of Vitamin Dகால்சியம் வலுவான எலும்புகளை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் முக்கியம். குறைந்த வைட்டமின் டி அளவு, எலும்பு வலி, எலும்பு முறிவு, தசை வலி மற்றும் தசை பலவீனம் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது.

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்பு வலுவாவதற்கு தேவையான கால்சியமும், பாஸ்பரசும் கிடைக்காத நிலை உருவாகும்.

எச்சரிக்கை! வைட்டமின் டி இல்லையென்றால் உங்க உடம்பில் இந்த விடயங்கள் நடக்காது | What Are The Most Important Benefits Of Vitamin Dஅதன் விளைவாக கால் எலும்புகள் வளைந்து காணப்படும். கால் எலும்புகள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. வலும்புகள் வலுவாக இருக்க வேண்டும் என்றால் வைட்டமின் டி மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. 

எலும்பு ஆரோக்கியத்துக்கும் தசைச் செயல்பாடுக்கும் இடையில்  நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. அதன் சீரான செயற்பாட்டிற்கு வைட்டமின் டி இன்றியமையாதது. 

எச்சரிக்கை! வைட்டமின் டி இல்லையென்றால் உங்க உடம்பில் இந்த விடயங்கள் நடக்காது | What Are The Most Important Benefits Of Vitamin Dகுறிப்பாக வயதாகும் போது வைட்டமின் டி குறைப்பாட்டால் தசை செயற்பாடுகள் அதிகமாக பாதிப்படைகின்றது.  

ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் கோளாறு எலும்புகள் பலவீனமடைவதன் தீவிர நிலையையே குறிக்கின்றது. இந்த நிலை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று வைட்டமின் டி குறைப்பாடு ஆகும். 

எச்சரிக்கை! வைட்டமின் டி இல்லையென்றால் உங்க உடம்பில் இந்த விடயங்கள் நடக்காது | What Are The Most Important Benefits Of Vitamin Dஎலும்புகள் அதன் வலுவை இழப்பதும், தடுக்கி விழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்கு பலவீனமாக இருக்கும் நிலையே எலும்பு வலு இழப்பு ஆகும். அதனை தடுக்க வைட்டமின் டி மிகவும் முக்கியம்.