பொதுவாகவே இந்து மத சாஸ்திரங்களின் அடிப்படையில்  நாம் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கு ஒரு முறைமை கையாளப்படுகின்றது. அதனை முறையாக பின்பற்றினால் வாழ்கை செல்ல செழிப்புடன் இருக்கும். 

இந்து மத நூல்களின் அடிப்படையில் துடைப்பம் லட்சுமி தேவியின் சின்னமாக பார்க்கப்படுகின்றது. உங்கள் வாழ்க்கை நிலையில்  வீட்டில் நீங்கள் துடைப்பத்தை வைக்கும் திசை பெரிதும் தாக்கம் செலுத்துகின்றது. 

பணக்கஷ்டம் தீரணுமா? வீட்டில் துடைப்பத்தை இந்த திசையில் வைங்க | Vastu Tips Best Direction To Place The Broom Stick

வாஸ்து அடிப்படையில் வீடடில் துடைப்பத்தை சரியான திசையில் வைக்க வேண்டியது அவசியம். வாஸ்துவின் விதிகளின் பிரகாரம் துடைப்பத்தை வைக்க சரியான திசை எது என்பது தொடர்பிலும் இதனை பின்பற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம். 

வீட்டில் வைக்கும் பொருட்கள் அனைத்தையும் திசை பார்த்து வைக்க வேண்டியது அவசியம் இது நமது வாழ்வில் நடக்கும் பல்வேறு விடயங்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கின்றது. 

பணக்கஷ்டம் தீரணுமா? வீட்டில் துடைப்பத்தை இந்த திசையில் வைங்க | Vastu Tips Best Direction To Place The Broom Stick

வீட்டில் ஈசானிய மூலை, அக்னி மூலை, நிருதி மூலை மற்றும் குபேர மூலை என நான்கு திசைகள் காணப்படுகின்ற போதிலும் தெற்கு மற்றும் மேற்கு இடையே துடைப்பத்தை வைப்பது தான் மிகவும் சரியானது என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. 

அதுமட்டுமன்றி  துடைப்பத்தை ஒருபோதும் செங்குத்தாக நிற்க வைக்க கூடாது. அது நிதி இழப்பை ஏற்படுத்தும் துடைப்பத்தை எப்போதும் படுத்தவாறு வைப்பதே அதற்கு மரியாதை செலுத்துவதாக அமைகின்றது. 

துடைப்பத்தின்  முகம் எப்போதும் கிழக்கு நோக்கி இருக்கும் வகையில் வைப்பது பணத்தையும் நேர்மறை ஆற்றல்களையும் வீட்டை நோக்கி ஈர்க்க உதவுகின்றது. 

பணக்கஷ்டம் தீரணுமா? வீட்டில் துடைப்பத்தை இந்த திசையில் வைங்க | Vastu Tips Best Direction To Place The Broom Stick

பெரும்பாலானவர்கள் சுத்தத்தை அதிகம் விரும்புபவராக இருக்கின்றோம். அதனால், வீட்டை அடிக்கடி துடைப்பத்தால் பெருக்கி, துடைத்துக்கொண்டே இருப்பதால் வீட்டில் உள்ள செல்வம் அழியும் என்றும் அது அசுபத்தின் அறிகுறியாகவும் பார்க்கப்படுகின்றது. 

வீட்டை சுத்தம் செய்வதற்கு உகந்த  நேரம் காலை மற்றும் மாலை நேரம் ஆகும். எல்லா நேரங்களிலும் வீட்டை சுத்தம் செய்வது அமங்களமான விடயமாகும்.

பணக்கஷ்டம் தீரணுமா? வீட்டில் துடைப்பத்தை இந்த திசையில் வைங்க | Vastu Tips Best Direction To Place The Broom Stick

அதேசமயம், துடைத்த பின் குப்பைகளை ஆங்காங்கே குவித்து வைத்தால், வறுமையும் கஷ்டங்களும் அதிகரித்துக் கொண்டே போகும்.

வீட்டில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், உடனே துடைக்கக் கூடாது. இது வேலையில் வெற்றியை பாதிக்கும். சனிக்கிழமை துடைப்பம் வாங்குவது நல்ல பலன்களை கொடுக்கும் என கூறப்படுகிறது. மேலும், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துடைப்பம் வாங்க கூடாது. 

பணக்கஷ்டம் தீரணுமா? வீட்டில் துடைப்பத்தை இந்த திசையில் வைங்க | Vastu Tips Best Direction To Place The Broom Stick

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, முதலில் காலையில் எழுந்ததும், வீட்டை சுத்தம் செய்வதற்கு முன்னர் இறைவழிபாடு செய்ய வேண்டியது முக்கியத்துவம் பெறுகின்றது. இவ்வாறன விடயங்களை வாஸ்து பிரகாரம் முறையாக கடைப்பிடிப்பதால் வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும்.