பொதுவாகவே கிரகங்களின் இடமாற்றமானது 12 ராசிகளிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது. அந்தவகையில் கடந்த12 ஜூலை 2024 செவ்வாய் ரிஷபம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தது.

எதிர்வரும் 26 ஆகஸ்ட் 2024 வரையில் செவ்வாயானது ரிஷபத்தில் இருப்பதால் இந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட சில ராசியினரின் காதல் வாழ்க்கை மிகுந்த மகிழ்சி நிறைந்ததாக இருக்கும்.

ரிஷபத்தில் செய்வாய்: காதல் வாழ்வில் கொடிகட்டி பறக்க போகும் ராசியினர் இவர்கள் தான்...உங்க ராசி என்ன? | Mars Transit Which Zodiac Get Favorable Love Life

அப்படி காதல் வாழ்வில் சாதக மாற்றங்களை சந்திக்க போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

ரிஷபத்தில் செய்வாய்: காதல் வாழ்வில் கொடிகட்டி பறக்க போகும் ராசியினர் இவர்கள் தான்...உங்க ராசி என்ன? | Mars Transit Which Zodiac Get Favorable Love Life

மேஷ ராசியினருக்கு முதல் மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் இரண்டாம் வீட்டிற்கு இடம்பெயர்ந்து இருப்பதால்,  குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையில் ஒற்றுமை அதிகரிக்கும். காதல் உறவில் இருப்பவர்களுக்கு அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதற்கான வாய்ப்பு அமையும். அதாவது திருமண பந்தத்தில் இணையும் யோகம் ஏற்படும். 

ரிஷபம்

ரிஷபத்தில் செய்வாய்: காதல் வாழ்வில் கொடிகட்டி பறக்க போகும் ராசியினர் இவர்கள் தான்...உங்க ராசி என்ன? | Mars Transit Which Zodiac Get Favorable Love Life

ரிஷப ராசியினருக்கு ஏழாவது மற்றும் பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியாகன செவ்வாய் இந்த தடவை  ரிஷப ராசிக்காரர்களின் முதல் வீட்டில் சஞ்சாரம் செய்திருக்கின்றமையால் குடும்ப வாழ்விற்காக நீண்ட நாள் காத்திருந்தவர்களுக்கு அல்லது காதல் விடயத்தில் பிரிவை சந்தித்தவர்களுக்கு மீண்டும் துணையுடன் இணையும் வாய்ப்பு கூடிவரும். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த கருத்து வேறுப்பாடுகள் அனைத்தும் நீங்கும். துணையின் காதல் முழுவதையும் அனுபவிக்கும் யோகம் அமையும். 

கடகம்

ரிஷபத்தில் செய்வாய்: காதல் வாழ்வில் கொடிகட்டி பறக்க போகும் ராசியினர் இவர்கள் தான்...உங்க ராசி என்ன? | Mars Transit Which Zodiac Get Favorable Love Life

கடக ராசியினரின் ஐந்து மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியாக  செவ்வாய் மற்றும் கடக ராசிக்காரர்களின் பதினொன்றாம் வீட்டிற்கு மாற்றமடைந்திருப்பது திருமண மற்றும் காதல் வாழ்வில் பல்வேறு சாதக மாற்றங்களை கொடுக்கின்றது. 

இந்த காலகட்டத்தில் துணையுடன் பாசம் அதிகரிக்கும். குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பு அமையும்.காதல் உறவில் இருப்பவர்களுக்கு உச்சகட்ட மகிழ்ச்சி கிடைக்கும். துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும்.