பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தூக்கம் இன்றியமையாதது. அப்படி நாம் தூங்கும் போது கனவில் பல நல்ல விடயங்களையும் தீய விடயங்களையும் சந்திக்க நேரிடும்.
இதற்கு என்ன அர்த்தம் இப்படி நடக்கப்போகின்றதா என பெரும்பாலானவர்கள் குழம்பிப்போகக்கூடும்.
ஆனால் கனவில் நாம் காணும் விடயங்கள் அப்படியே நிஜத்தில் நடக்கப்போகின்றது என்று அர்த்தம் கிடையாது. அதற்கான பலன்களே கிடைக்கும் என கனவு பற்றிய அறிவியல் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் புலி துரத்துவது போல் அல்லது புலி சம்பந்தமான கனவுகளின் அர்த்தம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கனவு சாஸ்திஜரங்களின் அடிப்படையில் புலி ஆபத்தின் அறிகுறியாகவே பார்க்கப்படு்கின்றது. எனவே புலி துரத்துவது போல் கனவு கண்டால், நெருக்கமான நபர்களில் ஒருவரால் உங்களுக்கு ஆபத்து வரப்போகின்றது என அர்த்தம்.
மேலும் இது ஒரு மோசமான அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. இவ்வாறு கனவு கண்டால் வாழ்க்கையை அழிக்கும் விடயங்கள் அதிகமாக நடக்கப்போகின்றது என்பதை எச்சரிப்பதாகவும் அமையும்.
வாழ்வில் பல நெருக்கடிகளை ஏற்படுத்தும் சில எதிர்மறை விஷயங்கள் நிகழ்வதற்கான அறிகுறியாகவும் புலி பற்றிய கனவுகள் பார்க்கப்டபடுகின்றது.
உயர் பதிவியில் இருக்கும் ஒருவர் புலி தன்னை பிடிப்பது போல் கனவு கண்டால், அவருக்கு பணியிடத்தில் பல எதிரிகள் இருப்பதையும அவர்களால் அவர் தோல்வியை அல்லது ஆபத்தை சந்திக்க நேரிடும் என்பதை உணர்த்துவதாக அமையும்.
ஒரு புலி தன்னை அடைய முயற்சிக்கும் போது அதிலிருந்து தப்பிப்பது போன்ற கனவு வந்தால், நீண்ட நாள் உங்களை சூழ்ந்திருந்த ஒரு பிரச்சினையில் இருந்து விடுபட போகின்றீர்கள் என்று அர்த்தம்.
புலி பற்றிய கனவுகள் அடிக்கடி உங்களுக்கு வருகின்றது என்றால் மோசமான மற்றும் உங்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொறாமை கொண்டவர்கள் உங்களுடன் நெருக்கமாக இருக்கின்றார்கள் என்று அர்த்தம்.