விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் ரச்சித்தா மகாலட்சுமி நடித்துபட்டிதொட்டி எங்கும் பேமஸ் ஆனார். தற்போது ரச்சித்தா மகாலட்சுமி சின்னத்திரையில் இருந்து விலகி, வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடித்துள்ள fire படத்தின் போஸ்டர்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் கவனம் செலுத்தி வந்தாலும் அதை விட சோசியல் மீடியாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

fire படத்தில் நடித்திருந்த பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ், படத்தின் தயாரிப்பாளர் இன்றுவரை நடித்ததற்கு ஒரு பைசா கூட தரவில்லை என்று கூறியிருந்தார்.

இதற்கு fire படத்தில் கதாநாயகியாக நடித்த ரச்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், இந்த ஏமாற்று இடத்தில் இருந்து முன்பே நான் வெளியேறிவிட்டேன். உங்களுக்கு இப்போது தான் தெரிகிறது, ஆனாலும் பரவாயில்லை, இனி நான் தனியாள் கிடையாது துணைக்கு ஆள் கிடைத்துவிட்டது என்று ஆறுதல்பட்டார்.

மேலும், நீங்கள் ஒரு படத்தின் தயாரிப்பாளர், இயக்குனராக இருக்கலாம், அதற்காக என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்று நினைக்க வேண்டாம், தன்வினை தன்னைச்சுடும், தயாரிப்பாளர், இயக்குனர் என்று நீங்கள் சொல்வதற்கே தகுதியற்றவர் என்று ஜே எஸ் கே சதீஷை டேக் செய்து திட்டியுள்ளார்.

இதற்கு தயாரிப்பாளர் சதீஷ், ரச்சிதா மகாலட்சுமிக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.