பொதுவாக திருமணமான புதிதில் தம்பதிகளுக்கு இடையே ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இதனை எப்படி கையாள வேண்டும் என்பதனை தம்பதிகள் இருவரும் புரிந்து வைத்திருக்க வேண்டும்.
காதல் திருமணமோ, பெற்றோர் நடத்தி வைத்த திருமணமோ இப்படி எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
ஆணும் பெண்ணும் திருமண வாழ்க்கையில் ஒன்றாக நுழையும் போது இருவரின் குணங்களும் வேறுபாட்டு காணப்படும்.
இதனை ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டால் மற்றவர்கள் போல் உங்கள் வாழ்க்கையும் சிறக்கும்.
அந்த வகையில் புதுமண தம்பதிகளிடையே பிரச்சினை வராமல் எப்படி தடுக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. திருமணம் செய்து கொண்ட பின்னர் கணவன் மனைவியை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். அதே போல் மனைவி கணவரை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். உதாரணமாக வார இறுதி நாட்களில் கணவன் - மனைவி இருவரும் தனியாக நேரத்தை கழிக்க வேண்டும்.
2 திருமணத்திற்கு பின்னர் வாழ்க்கையில் நடக்கும் விடயங்களை சகித்துக் கொண்டு வாழப்பழகிக் கொள்ள வேண்டும். சிறுசிறு விடயங்களுக்கு கோபப்பட்டால் அது காலப்போக்கில் கணவன் - மனைவி உறவிற்குள் விரிசலை ஏற்படுத்தும்.
3. உங்கள் புதிய வாழ்க்கை துணைக்கு முக்கியத்துவம் கொடுக்கும். அதே சமயம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை முற்றிலும் மறந்து விடக் கூடாது. துணையின் அனுமதியுடன் நண்பர்கள், உறவினர்களுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும். இது உங்களுக்குள் ஒரு இணக்கத்தை உருவாக்கும்.
4. ஒரே வீட்டில் இருப்பதால் டூத் பேஸ்ட்டை ஷேர் செய்து கொள்வது துவக்கம் பிரச்சினைகளை ஷேர் செய்வது வரை துணைக்கு உண்மையாக இருந்தால் பிரச்சினைகள் குறையும். இருவருக்குள்ளும் வாக்குவாதங்கள் ஏற்படும். அதனை சகித்து கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல கற்றுக் கொள்ள வேண்டும். வீண் வீண் விவாதங்களை முற்றிலும் குறைக்க வேண்டும்.
5. வீட்டில் தனியாக இருக்கும் போது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வீட்டை அலங்கரிக்கலாம். துணையின் ரசனையை தெரிந்து கொண்டு இப்படியான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் வீட்டின் நிம்மதி நிலைத்திருக்கும். சில வேளைகளில் நீங்கள் புதிய துணை வேறு இடத்தில இருக்கிறோம் என்று அசவுகரியமாக உணரலாம். இப்படியான நேரங்களில் இடத்தை நமக்கு ஏற்றால் போல் மாற்றிக் கொள்ளலாம்.