பொதுவாக நம்மில் பலர் முகத்திதை பராமரிப்பதில் காட்டும் அக்கறையை கால்களைபராமரிப்பதில் காட்டுவது கிடையாது. சொல்லப்போனால் முகம் மற்றும் கைக்களுக்கு பாடுப்பதை விட கால்களுக்கு சற்று அதிகமாகவே பராமரிப்பு அவசியம்.
ஏனெனில் வெயிலில் செல்லும் போது, சூரியக்கதிர்களின் தாக்கம், முகம் மற்றும் கைகளை விடவும் கால்களில் தான் அதிகம் தாக்கம் செலுத்துகின்றது. இதனால் தான் கால்கள் எப்போதும் கருப்பாக இருக்கும்.
இந்த பிரச்சினையை நீக்கி கால்களின் நிறத்தை மேம்படுத்தவும் தூய்மையாக பராமரிக்கவும் பின்பற்றக்கூடிய எளிமையான வீட்டு வைத்தியம் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை ஆகியவற்றின் கலவை சருமத்தின் கருமையை போக்க பெரிதும் துணைப்புரிகின்றது. உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சையின் சாற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து நன்றான கலந்து பாதங்களில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் பாதங்களில் இருக்கும் கருமை நீக்கும். அதனை தொடர்ந்து செய்துவர கால்கள் மற்றும் பாதங்கள் பளப்பளப்பாக மாறுவதை கண்கூடாக பார்க்கலாம்.
கருமை நீக்குவதற்கு மஞ்ள் மற்றும் கடலைமாவு சிறந்த தெரிவாக இருக்கின்றது. ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் மஞ்சள், சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்த அந்த பேஸ்டை பாதங்களில் தடவி நன்கு காய்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்க்கு இரண்டு முறை செய்து வந்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
பேக்கிங் பவுடர் மற்றும் எலுமிச்சை
எலுமிச்சை மற்றும் பேக்கிங் பவுடர் கருமை நீக்குவதில் சிறப்பாக செயற்படக்கூடியது. இதற்கு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த பேஸ்டை கால்களில் தடவி 5 நிமிடங்கள் வரை உலரவிட்டு பின்னர் தேங்காய் எண்ணெய் கொண்டு கால்களை மசாஜ் செய்தால் கால்கள் தூய்மையாகவும் சிகப்பழகுடனும் இருக்கும். இது பாத வெடிப்புகளையும் சீர் செய்து பாதங்களை மென்மையாக மாற்ற உதவுகின்றது.
பப்பாளி மற்றும் தேன்
பப்பாளியில் உள்ள தோல் பாதங்களில் உள்ள கருமையை போக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. தேன் சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிப்பதில் சிறப்பாக செயற்படுகின்றது. பப்பாளியை நன்கு அரைத்து அதில் ஒரு ஸ்பூன் தோல் கலந்து அந்த கலவையை உங்கள் பாதங்களில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் நன்கு உலரவிட்டு கழுவினால் கால்கள் மற்றும் பாதங்களின் கருமை விரைவில் நீங்கி பாதங்களும் மென்மையாக மாறும்.