அதிக வேலையால் ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவில் கடந்த வியாழன் மாலை 4 மணியளவில் நடந்த சம்பவம் அனைவரிடமும் குழப்பத்திலும் சோகத்திலும் ஆழ்த்தியது.

'ரோபோ சூப்பர்வைசர்' என அழைக்கப்படும் இந்த ரோபோ, கவுன்சில் கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாம் மாடியிக்கு இடையில் மாடி படிக்கட்டுக்கு அடிப்பகுதியில் இருந்துள்ளது.

சம்பவத்தன்று குறித்த ரோபோ வினோதமாக நடந்து கொண்டதாக அதனை அவதானித்த சிலர் கூறியுள்ளார்களாம்.

சிதைந்த ரோபோவின் துண்டுகள் பகுப்பாய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான தெளிவாக தெரியாமல், பணிச்சுமை மற்றும் அதன் தாக்ககங்கள் காரணமாக இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

அதிக வேலையால் ரோபோ எடுத்த விபரீத முடிவு | South Korean Robot Kills Itself

ஆகஸ்ட் 2023 முதல் பணிபுரிந்த இந்த ரோபோ ஒரு ஜாக் ஆஃப் ஆல் டிரேட் ஆகும். ஆவணங்களை வழங்குவது மற்றும் நகரத்தை மேம்படுத்துவது முதல் குடியிருப்பாளர்களுக்கு தகவல்களை வழங்குவது வரை பல பணிகள் செய்யுமாம்.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வைல செய்த குறித்த ரோபோ தனது சொந்த சிவில் சர்வீஸ் அதிகாரி அட்டையுடன் முழுவதுமாக நகர மண்டபத்தில் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது.

அதிக வேலையால் ரோபோ எடுத்த விபரீத முடிவு | South Korean Robot Kills Itself

லிஃப்ட்களைப் பயன்படுத்தி இரு தளங்களுக்கு இடையில் அயராது நகர்ந்தது என்று இதனை அவதானித்தவர்கள் கூறியுள்ளனர். கலிபோர்னியாவைச் சேர்ந்த பியர் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தால் இந்த ரோபோ உருவாக்கப்பட்டது.

குறித்த ரோபோவின் திடீர் மறைவு உள்ளூர் ஊடகங்கள் மற்றும் ஆன்லைனில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக ரோபோ அதிகமான வேலை செய்ததா என்ற கேள்வி அதிகமாக எழுந்துள்ளது.