கிரகங்களில் ஒன்றான கேது பகவான் ஜுலை 8ம் தேதி முதல் தனது மாற்றத்தினை ஆரம்பிக்கும் நிலையில் 3 ராசியினர் மிகவும் டென்ஷனுடன் காணப்படுவார்களாம்.
கேது தற்போது கன்னி ராசியில் அமர்ந்து ஹஸ்த நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சஞ்சரிக்கின்றார். தற்போது இரண்டாவது பாதத்தில் பின்னோக்கிய நகர்வில் சஞ்சரிக்க போகின்றார்.
கேதுவின் இந்த பிற்போக்கு இயக்கம் சில ராசியினருக்கு மோசமன பலனை அளிக்கின்றது. வரும் ஜூலை 8ஆம் தேதி, கன்னிராசியின் ஹஸ்த நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில், கேது பகவான் பின்னோக்கி நகரப்போகிறார்.
இதன் காரணமாக சில ராசியினருக்கு டென்ஷன் அதிகரிக்கும். துன்பம் தரும் கேது கிரகத்தினை மகிழ்விக்க ’’கேது ஓம் ப்ரம் ப்ராம் ப்ரும் ஸஹ ரஹ்வே நமஹ’’ ‘’ஓம் ரா ரஹ்வே நம'' எனும் மந்திரத்தை உச்சரிக்கவும்.
துலாம்
கன்னி ராசியின் ஹஸ்த நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தில் கேதுவின் பெயர்ச்சியானது துலாம் ராசியினர் பல சவால்களை சந்திக்க நேரிடும். பொருளாதார வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதுடன், வேலைகளை முடிப்பதில் தடைகளும் ஏற்படும்.
இந்த நேரத்தில் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் எடுக்க வேண்டும். எதிரிகளின் தொலை அதிகரிக்கும் என்பதால், எந்தவொரு காரியத்திலும் அமைதியாகவே செல்லவும்.
கன்னி
கன்னி ராசியின் ஹஸ்த நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தில் கேதுவின் பெயர்ச்சி கன்னி ராசியினருக்கு அதிகமான கெடுதலை தரும். சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படும்.
பொருளாதார பிரச்சனை ஏற்படுவதுடன், அளவுக்கு மீறிய செலவுகள் மனதை தொந்தரவு செய்வதுடன், மன அழுத்தத்தினை உருவாக்கும். இதிலிருந்து எச்சரிக்கையாக தப்பிக்க வேண்டும்.
கடகம்
கன்னி ராசியின் ஹஸ்த நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தில் கேதுவின் பெயர்ச்சியானது கடக ராசியினருக்கு நன்மையை அளிக்காது. பொருளாதாரத்தில் வீழ்ச்சி, பண இழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. நீங்கள் எதிர்மறையாக உணரலாம்.
வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். உடல்நலமும் மனநலமும் மோசமடையக்கூடும். தொழிலும் பொறுமை மிக முக்கியம். பிரச்சனையிலிருந்து தப்பிக்க கேது கிரஹ மந்திரத்தினை பாராயணம் செய்வது நல்லது.