தமிழகத்தில் டிக்டாக் அடிமைகளாகக் கிடந்த குடும்பப் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களிடம் பணம் பறித்து வந்த இளைஞர் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஊட்டியைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுனரான கார்த்தி லதா, சுதா, வானி, சுந்தரி, சனா, கவிதா, அம்முராஜி, ரோஜா, லைலா, விதிதா, ராதே , அனு, புஷ்பா, கோகிலா இவர்களுடன் ஒரு வட மாநில பெண் என 15 குடும்ப பெண்களுடன் டிக்டாக் மூலம் நட்பாகி பின்னர் காதல் வலையில் வீழ்த்தியுள்ளான்.

பின்னர் அவர்களின் வீடியோவை வைத்து மிரட்டி பணம் பறித்திருக்கிறான் கார்த்தி.

அந்தவகையில் திருமணமான பெண்கள், ஐ.டி நிறுவன ஊழியர், அடகுக்கடை அதிபர் மனைவி, என கார்த்தியின் கைவரிசையால் முகவரி இழந்த பெண்கள் பலர் என்று கூறப்படுகின்றது.

டிக்டாக் தடை செய்யப்பட்டதால் இவனது காதல் கணக்குகள் முடித்து வைக்கப்பட்ட நிலையில் டகாடக் என்ற செயலி மூலம் மீண்டும் காதல் லீலையை கார்த்தி தொடர்ந்துள்ளான்.

இந்த நிலையில் இவனால் ஏமாற்றப்பட்ட 10க்கும் மேற்பட்ட பெண்கள் வாட்ஸ் அப் மூலம் ஒன்றிணைந்து களவாணி கார்த்தி எப்படி எல்லாம் பெண்களை காதலித்து ஏமாற்றினான் என்பதை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டதோடு, அவன் பெயரிலேயே போலியான 2 கணக்குகளை தொடங்கி அவனை பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்தி வருகின்றனர்.

போலியான வாக்குறுதிகளைக் கொடுத்து காதலித்த பெண்களை வீடியோ எடுத்து பணம் பறித்து வந்த கார்த்தி தனது பழைய காதலிகளின் பழிவாங்கும் தாக்குதலுக்கு பதில் சொல்ல திராணி இல்லாமல் பதறித்துடித்து வருகின்றான்.

போதுமான அளவு ஓடியோ வீடியோ ஆதாரங்கள் உள்ள நிலையிலும் கார்த்தி மீது பொலிசார் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

கார்த்தியை கைது செய்யப்பட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.