சூடான காபியை காட்டிலும் கோல்ட் காபி குடிப்பது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றது என்பதை மருத்துவ ஆலோசகர் விரிவாக கூறியுள்ளதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நாம் அடிக்கடி ஒரு கப் கோல்ட் கோபி குடிக்கும் போது அது நமது செரிமான சக்தியை அதிகரிக்கிறது எனப்படுகின்றது. இதனால் மலச்சிக்கலை போக்கும். எனர்ஜியை அதிகரிக்கிறது, சரியான உடல் எடையை பராமரிக்கிறது.
இதை தவிர இதில் இன்னும் பல நன்மைகள் கிடைக்கின்றன. இதய நோய், பக்கவாதம், கீல்வாதம், டைப் 2 நீரிழிவு, புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது.
என்னதான், பல நன்மைகளை செய்தாலும், தினமும் அளவுக்கு அதிகமாக கோல்ட் காபி குடிப்பது மோசமான பக்க விளைவுகளுக்கே வழிவகுத்துக் கொடுக்கும். நாம் காபி குடிக்கும் போது அதை தினமும் குடிக்க ஆர்வமாக இருப்பதற்கு காரணம் அந்த காபியில் உள்ள கபைஃன்கள் தான்.
சிலருக்கு ஒரு நாள் காபி குடிக்காமல் இருந்தாலும், சோர்வு, தலைவலி, டென்ஷன், மன அழுத்தம், பதட்டம், நடுக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும். ஆனாலும் சூடான காபியை விட குளிரான காபியில் உடலுக்கு தேவையான அனைத்து நன்மைகளும் இருக்கிறது.