சர்ச்சை நாயகியாக இருக்கும் வனிதா விஜயகுமாரின் ஒரு நாள் சம்பள விவரம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” படத்தில் மூலம் என்றி கொடுத்தவர் தான் வனிதா விஜயகுமார்.
இதனை தொடர்ந்து பெரியளவு படங்களில் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு 3 திருமணங்கள் செய்து விட்டு சர்ச்சையாக நாயகியாகவே மாறி விட்டார்.
சினிமா பிரேக் கொடுத்து விட்டு, தற்போது சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என வனிதா பிஸியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வனிதாவின் ஒரு நாள் youtube இருந்து வரும் வருமானம் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், “ தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்தால் ஒரு மாதத்திற்கு ஒன்றரை லட்சம் ருபாய் வரும், அதுவே சரியாக கன்டென்ட் போடாமல் இருந்தால் சில நேரங்களில் 5 ஆயிரம், 10 ஆயிரம் என்று கூட மாத வருமானம் இருந்திருக்கிறது ” என ஓபனாக கூறியுள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள், “இவ்வளவு கொஞ்சமாக இருந்தால் எப்படி வாழ்க்கை கொண்டு போனீங்க..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.