படுக்கையில் நாம் ஒரே முறையில் தூங்க மாட்டோம். ஆனாலும் சிலர் ஒரே மாதிரியான பொஸிசனில் நீண்ட நேரம் தூங்குவார்கள். அல்லது அடிக்கடி தூங்குவார்கள். அப்படி, நீங்கள் தூங்கும் விதம் உங்கள் ஆளுமையின் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
நீங்கள் உறங்கும் விதம் உங்கள் சமூக நடத்தையையும் பிரதிபலிக்கலாம். உதாரணமாக, முழு பின்புறத்தையும் படுக்கையில் இருக்குமாறு மல்லாந்து தூங்குபவர்கள் சமூக சூழ்நிலைகளில் வெளியே வந்து உறுதியானவர்களாக தங்கள் பங்கை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம், அதே சமயம் குப்புற படுத்து வயிற்றில் தூங்குபவர்கள் வெட்கப்பட்டு பின்வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதைப்பற்றி இங்கே விரிவாக பார்ப்போம்.
மல்லாந்து படுத்தல்
நீங்கள் கவனமான, அமைதியான, வலிமையான நபர் என்பதை இது வெளிப்படுத்துகிறது. நீங்கள் மோதல்கள் மற்றும் வம்புகளை தவிர்க்கிறீர்கள். நூறு பொய்களை சொல்வதை விட உண்மையை பேச விரும்புகிறீர்கள். நீங்கள் ஒழுங்கை விரும்புகிறீர்கள். உங்களைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பீர்கள். உங்கள் எண்ணங்களை உங்களுக்குள் வைத்துக்கொள்ள முனைகிறீர்கள். எந்தவொரு சூழ்நிலையிலும் நீங்கள் மிக விரைவாக செயல்படுவது அரிதாகவே காணப்படுகிறது. மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள். வாழ்க்கையை முழுமையாக வாழ ஆசைப்படுகிறீர்கள். உங்களுக்கு வலுவான ஆளுமை திறன் இருக்கலாம். வாழ்க்கையில் உங்கள் இலக்குகளை அடைவதில் நீங்கள் மிகவும் பிடிவாதமாக இருக்கிறீர்கள்.
கருவிலுள்ள குழந்தை போன்று உறங்குதல்
நீங்கள் கருவிலுள்ள குழந்தையைப் போல சுருண்டு தூங்குவது, உலகில் கடினமான வெளிப்புறத்தை வைத்திருப்பதை வெளிப்படுத்துகிறது. நீங்கள் ஒரு கூச்ச சுபாவமுள்ள நபராக இருக்கலாம். மிகவும் உள்முக சிந்தனை கொண்டவராக இருக்கலாம். எழுதுதல், ஓவியம் வரைதல், நடனம், பாடுதல், வலைப்பதிவு செய்தல் போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் நாட்டம் கொள்ளலாம், இது உங்களையும் உங்கள் மறைந்திருக்கும் ஆசைகளையும் வெளிப்படுத்துவதற்கான தளத்தை வழங்குகிறது. கருவில் இருக்கும் நிலையில் தூங்குவது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்கும் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபட உதவுகிறது.
பொதுவிடங்களில் அல்லது அதிக பார்வையாளர்களிடம் பேசுவதில் நீங்கள் பிரச்சனை அல்லது பதட்டத்தை அனுபவிக்கலாம். 1970-களில் சாமுவேல் டன்கெல் தூக்க ஆராய்ச்சி, கருவின் தூக்க நிலை பொதுவாக கவலை அல்லது உயர் மற்றும் தாழ்வான எமோஷனை அனுபவிக்கும் நபர்களில் அதிகமாகக் காணப்படுவதாக தெரிவிக்கிறது. கருவின் நிலையில் தூங்குபவர்கள் பொதுவாக புதிய அனுபவங்களுக்கு முயற்சிக்க மாட்டார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டது. அவர்களிடம் கைவிடப்படுவோம் என்ற சுய பாதுகாப்பின்மை மேலோங்கி காணப்படும்.
குப்புற படுத்தல்
நீங்கள் உங்கள் வயிற்றில் தூங்கினால், வேடிக்கையான, விளையாட்டுத்தனமான, திறந்த மனதுடைய நபராக இருப்பீர்கள். வாழ்க்கையில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதில் உங்களுக்கு அபரிமிதமான தெளிவு உள்ளது. சுதந்திர மனப்பான்மையை வெளிப்படுத்துகிறீர்கள். இருப்பினும், நீங்கள் உள்ளே பதட்டமாக அல்லது கவலையாக உணரலாம். எல்லாவற்றையும் கட்டுப்படுத்த விரும்புகிறீர்கள். விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக கையாள்வது உங்களுக்கு கடினமாக இருக்கலாம்.
நீங்கள் ஒரு சாகசக்காரர், ரிஸ்க் எடுப்பவர் மற்றும் மிகவும் நம்பிக்கையான தனிநபர். எந்தவொரு துன்பத்தின் பிரகாசமான பக்கத்தையும் நீங்கள் பார்க்க விரும்புகிறீர்கள். நன்றியுணர்வு நிறைந்தவர். வயிற்றில் உறங்குபவர்களும் மனக்கிளர்ச்சி, பாதுகாப்பின்மை அல்லது நம்பிக்கையின்மை ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம் என்று தூக்க ஆராய்ச்சி நிபுணர் டன்கெல் கூறினார். இருப்பினும், நீங்கள் எந்த எதிர்மறை உணர்ச்சிகளையும் மறைக்க வல்லவர்.
ஒருக்களித்துப் படுத்தல்
நீங்கள் ஒரு சுலபமான சமூக நபர் என்பதை இது வெளிப்படுத்துகிறது. சுரங்கப்பாதையில் பயணிக்கும் போது கூட அறையில் உள்ள ஒருவருடன் பேசுவதைப் போல சகஜமாக பேசுவீர்கள். இருப்பினும், உங்கள் நெருங்கிய வட்டத்தில் சுயமாக இருக்க விரும்புகிறீர்கள். மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள், இது சில சமயங்களில் உங்களை எளிதில் வற்புறுத்துவது போல் தோன்றும். மக்கள் உங்களைப் பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுப்பதில் மிகவும் மெதுவாக இருப்பீர்கள்.