முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் மிகவும் சுவையுடையது என்பதினால் எல்லாருமே விரும்பிச் சாப்பிடுவார்கள். அதன் சுவையும், வலிமையான தன்மையும், நல்ல வாசனையும், இந்த பழத்திற்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக அமைகின்றது.

இப்பழத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிகளும் அதன் விதைகள் முதல் சதை வரை அனைத்துமே சாப்பிட கூடியதாக இருக்கின்றது. வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் பலாப்பழத்தில் காணப்படுகின்றன.

இந்த பிரச்சினை இருக்கா? அப்போ தவறியும் பலாப்பழம் சாப்பிடாதீங்க | These People Should Stay Away From Jack Fruit

பலாப்பழத்தில் வைட்டமின் ஏ மிகுந்துள்ளது. மேலும் வைட்டமின் சி மற்றும் பி காம்பிளக்ஸ் ஆகிய சத்துக்ககளும் பலாப்பழத்தில் நிறைந்து காணப்படுகின்றது. பலாப்பழம் யாரொல்லாம் சாப்பிட கூடாது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதில் அதிகளவில் இரும்புச் சத்து காணப்படுவதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு ரத்தசோகை வராமல் தடுக்க பெரிதும் உதவுகின்றது.  மேலும், கருவில் உள்ள குழந்தைக்குத் தேவையான ஃபோலிக் அமிலமும் பலாப்பழத்தில் அதிகமாக காணப்படுகின்றது. 

இந்த பிரச்சினை இருக்கா? அப்போ தவறியும் பலாப்பழம் சாப்பிடாதீங்க | These People Should Stay Away From Jack Fruitபலாப்பழத்தில் செறிந்துள்ள பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. பலாப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றது. 

அதிக நீர்ச்சத்து கொண்ட இந்த பழத்தை ஆண்கள் உட்கொள்வது ஆரோக்கியமான உயிரணுக்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவும். கூந்தல் உதிர்வு ,  தோல் பிரச்சினை, ரத்த சோகை கொண்ட ஆண்களுக்கும் பலாப்பழம் சிறந்த தீர்வாக இருக்கும். 

இந்த பிரச்சினை இருக்கா? அப்போ தவறியும் பலாப்பழம் சாப்பிடாதீங்க | These People Should Stay Away From Jack Fruitஅஜீரணக் கோளாறு உள்ளவர்களும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். 

அதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கலுக்குத் தீர்வு கொடுக்கும் அதே நேரம் அதிகளவு நார்ச்சத்து உட்கொள்வது வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் பிரச்சினைகளுக்கு காரணமாகவும் அமையலாம். எனவே இவ்வாறான பிரச்சினை இருப்பவர்கள் பலாப்பழத்தை தவிர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.