சினிமா துறையில் பணியாற்றும் நடிகர்களும் நடிகைகளும் ஒரு சில காட்சிகளில் இயக்குநரின் உத்தரவின் பேரில் மிக நெருக்கமாக நடிப்பதுண்டு. ஆனால் அந்த நெருக்கம் இயக்குநர் கட் சொன்னப் பிறகும் நீடித்ததினால் பலரது செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்து, விஷயம் காட்டுத்தீ போல பரவியுள்ளது. ஒரு சிலர் காதும் காதும் வெச்சபடி விஷயத்தை தங்களுக்குள் வைத்துக் கொண்டதும் உண்டு. ஆனாலும், அந்த விஷயங்கள் காலம் கடந்து வெளியாகியுள்ளது.
அப்படி தற்போது ஒரு நடிகர் நடிகை குறித்த தகவல் தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது. சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகின்றார் அந்த நடிகை. ஒருகட்டத்தில் சினிமாவுக்கு கட் சொல்லிவிட்டு, படிப்பின் மீது கவனம் செலுத்தச் சென்றுவிட்டார். படிப்பை முடித்த கையோடு மீண்டும் சினிமாவுக்குள் எண்ட்ரி கொடுத்த நடிகை, அப்போது மப்பும் மந்தாரமும் நிறைந்த அழகியாக இருந்துள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
சீனியர் நடிகர்கள் தொடங்கி பிரபல தயாரிப்பாளர்கள் வரை தங்களது படங்களில் அவரை நியமித்து நடிக்க வைத்திருக்கின்றனர். நடிகைக்கு காதும் காதும் வைத்த மாதிரி தூதுவிட்டுப் பார்த்துள்ளனர். நடிகை தரப்பில் இருந்து ரெட் சிக்னல் வந்ததால், நடிகர்கள் தங்களது முயற்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அது, இயக்குநர்களை தங்கள் வலையில் போட்டு, மிகவும் நெருக்கமான காட்சிகள் இருப்பதைப் போன்று காட்சி எடுக்க வைத்து, நடிகையை தங்களுக்கு நெருக்கமாக வைத்துப் பார்த்துக் கொள்வார்களாம். அப்போது நடிகை தனது வலையில் விழுந்து விடும் என நம்பிய நடிகர்கள் பலருக்கும் தோல்விதான் விடை.
ஆனால், அந்த விஷயத்தில் கெட்டிக்காரராக இருந்த நடிகர் ஒருவர், நடிகையை தன்வலையில் வீழ்த்தியுள்ளார். இதுமட்டும் இல்லாமல், நடிகையை அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இந்த தனிமை சந்திப்பு ஒரு நிலைக்கு மேல் அடுத்த கட்டத்திற்குச் சென்றது. இந்த அடுத்த கட்டத்தில் இருவருக்கும் ஈர்ப்பு அதிகமாக இருந்ததால், சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் ஒரு ஹோட்டலில் நிரந்தரமாக ரூம் புக் செய்துவிடுவார்களாம். நடிகரோ தனது பர்ஃபாமன்ஸை அதிகப்படுத்த வெளிநாட்டில் இருந்தெல்லாம் விஷயங்களை வரவழைத்து, நடிகையை சந்தோஷப்படுத்தியுள்ளாராம்.
ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் அந்த நடிகரின் நடவடிக்கைகள் நடிகைக்கு சலிப்பை ஏற்படுத்தியதால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இருவரும் இனிமேல் தனிமையில் சந்திப்பதை நிறுத்திக் கொள்ளலாம் என மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம். இதனையே எதிர்பார்த்திருந்த நடிகர் அடுத்த நடிகை மீது தாவிவிட்டாராம். நடிகையும் படங்களில் நடிப்பதில் பிசியாகிவிட்டாராம்.
அண்மையில் இந்த நடிகையின் வீட்டில் துயரச் சம்பவம் நிகழ்ந்ததால், ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு ஆறுதல் கூறியது. முன்பு நெருக்கமாக இருந்த நடிகர் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக ஆறுதல் கூறி, நடிகையை மீண்டும் தன் வலையில் வீழ்த்திவிட்டார் என கூறப்படுகின்றது. இந்த விஷயத்தை நடிகையின் ஹிஸ்ட்ரி குறித்து தெரிந்த கோலிவுட் வாசிகள் காதும் காதும் வைத்தபடி பேசி வருகின்றார்களாம். ஆனால் இந்தமுறை போட்டோவே ரிலீஸ் ஆனாலும் இருவருக்கும் கவலை இல்லை என்கின்ற மனநிலையில் இருக்கின்றனராம்.