ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ஒவ்வொரு ராசிக்கும் அதற்குரிய எழுத்துக்கள் இருக்கின்றன. அந்த எழுத்துக்களை, முதலெழுத்தாக ஓசையாக வருமாறு பெயர் வைப்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கங்களில் ஒன்று.
அதேபோல பிறந்த தேதியின் அடிப்படையில் நியூமராலஜிக்கு ஏற்றார்போல பெயர் சூட்டும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு எழுத்துக்கும், ஒவ்வொரு எண்ணும், அதற்குரிய தன்மைகளும் இருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு, அதைச் சார்ந்த எழுத்தை முதல் எழுத்தாக வருமாறு பெயர் வைத்தால் அதிர்ஷ்டமாக இருக்கும் என்று குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் பல விஷயங்கள் இருக்கின்றன.
E என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால் நீங்கள் சமூக தொடர்பு, தகவல் தொடர்பு, பயணம், ஆகியவற்றை விரும்புவீர்கள்.
எந்த அளவுக்கு மற்றவர்களுடன் இந்த எழுத்தின் வடிவம் மூன்று கோடுகளை ஒரு பக்கம் மட்டும் இணைத்து, மறுபக்கம் முழுமையாக அடையவில்லை. வளைந்து கொடுக்காமல் இருப்பதால், இவர்களுக்கு ஈகோ அதிகம் இருக்கும்.
ஆண், பூமி, ஃபெமினைன் ஆற்றல், உள்ளுணர்வு மற்றும் ஞானத்தைக் குறிக்கிறது. E என்ற எழுத்தை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள், மற்றவர்களுடன் பழகுவதை மிகவும் விரும்புகிறார்கள்.
இவர்களுக்கு மிகப்பெரிய பலமே, இவர்களின் தகவல் தொடர்புத் திறன். அனைவருடன் உரையாடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் அவர்கள் தங்கள் நேரத்தை தனியாக செலவிட விரும்பவில்லை என்று அர்த்தமல்ல. சுதந்திரமாக இருப்பதை மிகவும் நேசிக்கிறார்கள்.
அதே நேரத்தில், மிகவும் உணர்ச்சிவசப்படும் தன்மை கொண்டவர்கள். அன்பும் பாசமும் உலகில் அவசியம் என்று தீவிரமாக நம்புகிறார்கள். எளிதில் அனைவரையும் நம்பிவிடுகிறார்கள்.
பயண விரும்பிகள். சாகசங்களை பெரிதாக விரும்பாவிட்டாலும், பல இடங்களுக்கு செல்ல விரும்புவார்கள்.
உலகை சுற்றி வர வாய்ப்பு கிடைத்தால், முதலில் கிளம்புபவர்கள் இவர்களாகத் தான் இருப்பார்கள். மிகவும் வித்தியாசமாக சிந்திப்பார்கள். அவ்வபோது மாற்றங்களை செய்வார்கள். அது தனக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் ஏற்படும் படி செய்வார்கள்.
- சுதந்திர மனப்பான்மை கொண்டவர்கள்
- அன்பாக இருப்பார்கள்
- மற்றவர்களை காயப்படுத்த மாட்டார்கள்
- பெரும்பாலும் நல்ல மனநிலையில் இருப்பார்கள்
- எதையும் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்
- சுற்றி இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள்
- பயணம் செல்வதில் அலாதியான பிரியம் கொண்டவர்கள்
- உள்ளுணர்வு பெரும்பாலும் சரியாக இருக்கும்
- பேச்சுத்திறமை
- வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில் தேர்ந்தவர்கள்
- மற்றவர்கள் தயங்கும் விஷயத்தை தைரியமாக முன்னின்று செய்வார்கள்
- மாற்றங்களை எளிதில் ஏற்றுக்கொண்டு விடுவார்கள்