குடல் ஆரோக்கியம் நமது சருமம் மற்றும் தலைமுடியில் ஒரு சில அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. முகப்பரு, எக்சிமா, ரோசாசியா, வறட்சி, பொடுகு மற்றும் முடி மெலிந்து போதல் ஆகியவை இந்த அறிகுறிகளில் அடங்கும்.

முடி கொட்டுவது சாதாரண விஷயம் கிடையாது. இந்த முடி கொட்டுவதில் வெளிப்புற தோற்றத்தில் எவ்வளவு பாதிப்பு காணப்படுகின்றதோ அதே அளவிற்கு உடலின் உட்புறத்தில் பாதிப்பு காணப்படுகின்றது.

அந்த வகையில் மோசமான குடல் ஆரோக்கியம் நமது சருமம் மற்றும் தலைமுடியில் ஒரு சில அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. 

நமது குடலில் சமநிலை பராமரிக்கப்படாமல் இருந்தால் அதனால் வீக்கம், அழற்சி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்பட்டு, அது நேரடியாக நமது சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. 

குடல் ஆரோக்கியம் சீராக இருந்தால் சருமம் தெளிவாக இருக்கும். உங்களுக்கு போதுமான நீரேற்றம் கிடைத்துள்ளது என்பதை அது உறுதி செய்கிறது.

உடலில் இந்த பிரச்சனை இருந்தாலும் தலைமுடி கொட்டுமாம்! என்ன பிரச்சனை? | Hair Loss On Skin And Hair And How To Improve Itகுடல் ஆரோக்கியமாக இல்லாத போது அதனால் வீக்கம் ஏற்பட்டு குடலால் ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்ச முடியாமல் போகிறது. இதன் விளைவாக சருமம் மற்றும் தலைமுடி சிக்கல்கள் உண்டாகிறது.உண்மையான அழகு என்பது உட்புறத்தில் இருந்து துவங்குகிறது.

உடலில் இந்த பிரச்சனை இருந்தாலும் தலைமுடி கொட்டுமாம்! என்ன பிரச்சனை? | Hair Loss On Skin And Hair And How To Improve Itபளபளப்பான சருமம் மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் கட்டாயமாக உங்கள் குடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பாருங்கள். நிச்சயமாக நல்ல பலனை பெறுவீர்கள்.