சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கோழி இறைச்சியில் ஒரு பகுதியை மட்டும் சாப்பிட கூடாது என மருத்துவர் பரிந்துரைக்கிறார்.
கோழி இறைச்சி சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும் அதில் ஏராளமான தீங்குகளும் காணப்படுகின்றன. இதில் புரதச்சத்து அதிம் காணப்படுகின்றது. இது அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது உடலுக்கு தீங்கை தரும் ஆனால் இது ஆரோக்கியமானது தான்.
ஆனால் கோழியின் தோல் பகுதியை சாப்பிட கூடாது. இதில் இதில் அதிக அளவு கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு உள்ளது. இது கோழியின் மிகவும் பயனற்ற பகுதியாகும். இது குளோரின் எச்சங்களைக் கொண்டிருக்கலாம், அவை சிக்கனின் தோற்றத்தை புதியது போல வைத்திருக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
இதை நாம் உண்ணும் போது நமது உடலுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காமல் போகும். பல நோய்களை கொண்டு வந்து சேர்க்கும்.
கோழியின் தோலை உண்பதால் உடலில் தீங்கு விளைவிக்கும் கொழுப்பு சேரும் மற்றும் உங்களது உடல் எடை கூடலாம். மேலும், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே முடிந்தவரை கோழி தோல் உண்பதை தவிர்ப்பது நல்லது.