முரட்டு சிங்கிளாக வளம் வந்த நடிகர் பிரேம்ஜி தற்போது தனது திருமண வாழ்வை துவங்கியுள்ளார். இந்து என்பவருடன் அவருக்கு கடந்த ஜூன் 9-ஆம் தேதி பெற்றோர்கள் சம்மதத்தின் பேரில் திருமணம் சிம்பிளாக நடைபெற்றது.
அவர் மணமுடித்துள்ள பெண்ணின் பெயர் இந்து. அவர் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்த போது தான் இருவருக்கும் சமூகவலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரேம்ஜி திருமணம் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக யூடியூப்பில் பல சினிமா விமர்சகராகள் முளைத்து பிரேம்ஜி தொடர்பாக பல கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.
அப்படி தான் பரமேஸ்வரன் என்பவர் கூறிய கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றது. அவர் அளித்த பேட்டியில், நடிகை சோனா பிரேம்ஜிக்கு மீது affection ஏற்பட்டது. நெருங்கி பழகினார்கள்.
அதே போல சோனாவுக்கும் பிரேம்ஜி மீது affection இருந்தது. ஒரு கட்டத்தில் கங்கை அமரன் இவர்களது திருமணதிற்கு ஓகே சொல்லவிட்டார். ஆனால், கடைசி நேரத்தில் தயாரிப்பாளர் டி. சிவா தான் ஆட்டத்தை களைத்துவிட்டார். எதுக்கு திருமணம் எல்லாம் பண்ணிகிட்டு என்று சொல்லி மனதை மாத்திவிட்டார் என பரமேஸ்வரன் பேட்டியில் பேசினார்.