பாகுபலி படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரபாஸ். சமீபத்தில் இவர் நடிப்பில் உருவான கல்கி 2898 படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது. தற்போது 40 வயதை நெருங்கி இருக்கும் பிரபாஸ் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

பிரபாஸ் - அனுஷ்கா இடையே காதல் ஏற்பட்டதாகவும்,அதன் பிறகு இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டதாகவும் ஒரு தகவல் கூறப்பட்டது.

இந்த நிலையில் பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் குறித்து இயக்குனர் ராஜமவுலி ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். அதில் அவர், பிரபாஸ் அடிப்படையில் ஒரு முழு சோம்பேறி. திருமணம் செய்யாததற்கும் அவருடைய சோம்பேறித்தனம் தான் காரணமாகும். இந்த விஷயம் தான் அவரை திருமணம் செய்து கொள்ளாமல் தடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.