தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. முன்னணி நடிகர்களின் படங்கள் தான் பெரிய பட்ஜெட்டில் வெளியாகும் மற்றும் நடிகர்களின் படங்கள் மீடியமான அல்லது மிகச் சிறிய பட்ஜெட்டில் வெளியாகும்.

அப்படி கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களின் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸ் அடிப்படையில் முதல் இடம் பிடித்தது யார் என்பது குறித்த டாப் 10 லிஸ்ட் வெளியாகியுள்ளது.

இந்த லிஸ்டில் ரூபாய் 300 கோடிக்கும் அதிகமான வசூலுடன் தளபதி விஜய்யின் பிகில் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

அடுத்ததாக தல அஜித்தின் விசுவாசம் திரைப்படம் இரண்டாம் இடத்தைப் பிடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்டை திரைப்படத்திற்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.இதோ அந்த லிஸ்ட்

  1. விஜய் – பிகில்
  2. அஜித் – விஸ்வாசம்
  3. ரஜினிகாந்த் – பேட்ட
  4. தனுஷ் – அசுரன்
  5. கார்த்தி – கைதி
  6. ராகவா லாரன்ஸ் – காஞ்சனா 3
  7. சிவகார்த்திகேயன் – நம்ம வீட்டு பிள்ளை
  8. சூர்யா – காப்பான்
  9. ஜெயம் ரவி – கோமாளி
  10. தடம் – அருண் விஜய்